வழிபாடு

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 29 அக்டோபர் 2024

Published On 2024-10-29 07:00 IST   |   Update On 2024-10-29 07:00:00 IST
  • இன்று பிரதோசம்.
  • தென்காசி, கடையம் கோவில்களில் ஸ்ரீ சிவபெருமான் திருக்கல்யாணம்.

இன்றைய பஞ்சாங்கம்

குரோதி ஆண்டு ஐப்பசி-12 (செவ்வாய்க்கிழமை)

பிறை: தேய்பிறை

திதி: துவாதசி நண்பகல் 12.20 மணி வரை பிறகு திரயோதசி

நட்சத்திரம்: உத்திரம் இரவு 8.48 மணி வரை பிறகு அஸ்தம்

யோகம்: அமிர்த, சித்தயோகம்

ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

சூலம்: வடக்கு

நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

இன்று பிரதோசம். சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல். தென்காசி, கடையம் கோவில்களில் ஸ்ரீ சிவபெருமான் திருக்கல்யாணம். நெல்லை ஸ்ரீசுவாமி ஸ்ரீ அம்பாள் புஷ்பப் பல்லக்கில் பட்டணப் பிரவேசம். இரவு ஊஞ்சலில் காட்சி. திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட் நகர், திருவிடைமருதூர் கோவில்களில் மாலை சுவாமி ஸ்ரீ அம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி வரும் காட்சி. சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தக்கோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம். திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீஸ்வரர் கோவிலில் ஸ்ரீசண்முகருக்கு சத்ரு சம்ஹார அர்ச்சனை.

இன்றைய ராசிபலன்

மேஷம்-நன்மை

ரிஷபம்-நற்செயல்

மிதுனம்-திடம்

கடகம்-கவனம்

சிம்மம்-பரிசு

கன்னி-பாசம்

துலாம்- நிம்மதி

விருச்சிகம்-வரவு

தனுசு- தெளிவு

மகரம்-பக்தி

கும்பம்-லாபம்

மீனம்-செலவு

Tags:    

Similar News