வழிபாடு

திருமழிசை ஜெகந்நாத பெருமாள் கோவில் தேரோட்டம்

Published On 2022-07-15 10:15 IST   |   Update On 2022-07-15 10:15:00 IST
  • காலை, மாலையில் பல்வேறு வாகனங்களில் சாமி திருவீதி உலா நடைபெற்றது.
  • பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பெருமாளை வழிபட்டனர்.

திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு அருகே உள்ள திருமழிசை ஜெகந்நாத பெருமாள் கோவிலில் ஆனி பிரம்மோற்சவ விழா கடந்த 7-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற்று வரும் இந்த விழாவில் காலை, மாலை இருவேளைகளில் பல்வேறு வாகனங்களில் சாமி திருவீதி உலா நடைபெற்றது.

பிரம்மோற்சவ விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நேற்று தேரோட்டம் நடைபெற்றது. இதில் பூந்தமல்லி, திருமழிசை, ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர் போன்ற பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் பக்தி கோஷமிட்டபடி பயபக்தியுடன் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

இந்த தேரானது அசைந்தாடியபடி நான்கு வீதிகளில் வலம் வந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று பெருமாளை வழிபட்டனர். விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News