வழிபாடு

நடுவூர்க்கரை சிவசக்தி கோவிலில் பங்குனி திருவிழா 26-ந்தேதி தொடங்குகிறது

Published On 2023-03-24 06:42 GMT   |   Update On 2023-03-24 06:42 GMT
  • இந்த விழா 26-ம்தேதி தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
  • 4-ந்தேதி ஓடுக்கு பூஜை, பொங்கல் வழிபாடு, வாணவேடிக்கை நடக்கிறது.

நடுவூர்க்கரை சிவசக்தி கோவிலில் பங்குனி திருவிழா நாளை மறுநாள்(ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றதுடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. அதன்படி விழாவின் முதல்நாளான நாளை மறுநாள் அதிகாலை 4 மணிக்கு நடை திறப்பு, 4.30 மணிக்கு அபிஷேகம், கணபதி ஹோமம், 5 மணிக்கு அம்மச்சியார் பொட்டல் பத்ரகாளியம்மன் கோவிலில் இருந்து யானை மீது கொடி பவனி வருதல், காலை 6.30 மணிக்கு தீபாராதனை, 7 மணிக்கு உஷபூஜை, 730 மணிக்கு திருவிழா கொடியேற்றம் நடக்கிறது.

தொடர்ந்து 8 மணிக்கு நடைபெறும் இந்து சமய மாநாட்டுக்கு மாலதி சிவன் குத்துவிளக்கேற்றுகிறார். மாதா அமிர்தானந்தமயி மடம் பிர.நீலகண்டாம்ருத சைதன்யா சுவாமி, சாமிதோப்பு குரு சிவச்சந்திரன், சென்னையை சேர்ந்த முரளி வேலப்பதாஸ் சுவாமிகள் ஆன்மிகவுரையாற்றுகிறார்கள். சிறப்பு விருந்தினராக இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் கலந்து கொண்டு பேசுகிறார். காலை 8.30 மணிக்கு பஜனை, 9 மணிக்கு மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் இருந்து யானை மீது சந்தனகுடம் பவனி, 10.30 மணிக்கு கருமன்கூடல் சிவசுடலைமாட சாமி கோவிலில் இருந்து அம்மனுக்கு பூஜை பொருட்கள் எடுத்து வருதல், 11 மணிக்கு களபாபிஷேகம், கலசபூஜை, 12 மணிக்கு அலங்கார சிறப்பு பூஜை, பகல் 12.05 மணிக்கு அன்னதானம், மாலை 4 மணிக்கு பஜனை, 5 மணிக்கு திருவிளக்கு பூஜை, தேவி பூஜை நடக்கிறது.

திருவிளக்கு பூஜையை கருமன்கூடல் தங்களம் மனோகர் தொடங்கி வைக்கிறார். இரவு 8.30 மணிக்கு அன்னதானம், பட்டிமன்றம் ஆகியவை நடக்கிறது.

விழா நாட்களில் தினமும் அதிகாலை 4.30 மணிக்கு நடை திறப்பு, 6.30 மணிக்கு தீபாராதனை, பகல் 11.30 மணிக்கு அன்னதானம், மாலை 4 மணிக்கு பஜனை, இரவு 10 மணிக்கு சிறப்பு பூஜை ஆகியவை நடைபெறுகிறது.

விழாவில் 8-ம் நாளான அடுத்த மாதம்(ஏப்ரல்) 2-ந்தேதி மாலை 5 மணிக்கு மண்டைக்காடு கோவிலில் இருந்து மாவிளக்கு எடுத்து வருதல், 6 மணிக்கு சமய வகுப்பு மாணவ-மாணவிகள், ஆசிரியர்களுக்கான பேச்சு மற்றும் பாட்டுப்போட்டிகள் நடக்கிறது.

3-ந்தேதி காலை 8.30 மணிக்கு புஷ்பாபிஷேகம், 10 மணிக்கு ஆயில்ய பூஜை வழிபாடு, மதியம் 1 மணிக்கு யானை மீது சந்தனகுடம் பவனி, மாலை 5.30 மணிக்கு வளர்பிறை பிரதோஷ வழிபாடு ஆகியவை நடக்கிறது.

விழாவின் இறுதி நாளான 4-ந்தேதி காலை 7 மணிக்கு கடலுக்கு சென்று நீராடி புனித நீர் எடுத்து வருதல், இரவு 7 மணிக்கு போட்டிகளில் வெற்றி பெற்ற சமய வகுப்பு மாணவ-மாணவிக்கு பரிசு வழங்குதல், 10 மணிக்கு கொடை அலங்கார பூஜை, 11 மணிக்கு கொடை விழா, அதிகாலை 2 மணிக்கு ஓடுக்கு பூஜை, தொடர்ந்து பொங்கல் வழிபாடு, வாணவேடிக்கை ஆகியவை நடக்கிறது.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தலைவர் சுந்தரபாலன், செயலாளர் சுந்தரராஜ், பொருளாளர் சிவராஜ், அமைப்பாளர் முருகன், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் நீலகண்டன் நாடார், குமரேசன், சடையன், நாகராஜன் மற்றும் செயற்கழு உறுப்பினர்கள் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News