வைகுண்ட துவார தரிசன நாட்களில் திருப்பதி கோவிலில் ரூ.40 கோடி உண்டியல் வசூல்
- வைகுண்ட ஏகாதசிக்குப் பிறகு மொத்தம் 7 லட்சத்து 83 ஆயிரத்து 411 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.
- இது முந்தைய ஆண்டுகளை விட கணிசமாக அதிகரித்துள்ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட துவார தரிசனம் கடந்த 20-ந்தேதி முதல் நேற்று வரை நடந்தது. இன்று ஏகாந்த சேவைக்குப் பிறகு, வைகுண்ட வாசல் மூடப்பட்டது.
இதன் மூலம், கோவிலில் வழக்கமான தரிசன முறை மீண்டும் அமலுக்கு வந்தது. இன்று முதல் அனைத்து வகையான சிறப்பு தரிசனங்களும் சேவைகளும் வழக்கம் போல் தொடங்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு, வைகுண்ட துவார தரிசனத்தின் போது திருமலையில் சாதனை எண்ணிக்கையிலான பக்தர்கள் குவிந்தனர். தேவஸ்தான அதிகாரிகள் வெளியிட்ட அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, வைகுண்ட ஏகாதசிக்குப் பிறகு மொத்தம் 7 லட்சத்து 83 ஆயிரத்து 411 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.
இது முந்தைய ஆண்டுகளை விட கணிசமாக அதிகரித்துள்ளது. முதல் நாட்களில் கூட்டம் அதிகமாக இருந்தபோதிலும், எந்தவிதமான அசம்பாவித சம்பவங்களையும் தடுக்க அதிகாரிகள் ஒருங்கிணைந்தனர்.
வைகுண்ட துவார தரிசன நாட்களில் ரூ.40.43 கோடி உண்டியல் காணிக்கை கிடைத்தது.
முந்தைய ஆண்டுகளிலும், வைகுண்ட தரிசனத்தின் போது உண்டியல் வருமானம் சாதனை அளவில் பதிவானதாக தெரிவித்தனர்.