வழிபாடு

அஷ்டமி பிரதட்சண புராண வரலாறு

Published On 2026-01-11 14:57 IST   |   Update On 2026-01-11 14:57:00 IST
  • சிவபெருமான் அன்றைய தினம் படியளக்கச் சென்றுவிட்டு திரும்பி வந்தார்.
  • படியளக்கும் லீலை மதுரையம்பதியில் திருவிழாவாக நடத்தப்படுகிறது.

உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் சிவபெருமான் உணவு அளிக்கிறாரா? இல்லையா? என ஒருமுறை பார்வதி தேவிக்கு சந்தேகம் வந்துவிட்டது.

கடைசியாக அதைச் சோதனை செய்தே பார்த்து உண்மையை அறிந்து கொள்ளலாம் என்று முடிவு செய்தாள். அதன்படி ஒரு எறும்பை எடுத்து குவளைக்குள் போட்டு அடைத்து வைத்து விட்டாள் பார்வதிதேவி.

சிவபெருமான் அன்றைய தினம் படியளக்கச் சென்றுவிட்டு திரும்பி வந்தார். அவரை இடைமறித்த பார்வதி, அனைத்து ஜீவ ராசிகளுக்கும் படியளப்பதாக கூறுகிறீர்களே... இன்று அனைத்து உயிர்களுக்கும் படியளந்து முடித்துவிட்டீர்களா? என்று எதுவும் அறியாததுபோல கேட்டாள். ஆம்... அதில் உனக் கென்ன சந்தேகம்...? என்று சிவபெருமான் பதிலளித்தார்.

இன்று ஈசன் நம்மிடம் வசமாக சிக்கிக்கொண்டார் என்று மனதிற்குள் நினைத்துக்கொண்ட பார்வதிதேவி, எறும்பை அடைத்து வைத்திருந்த குடுவையை எடுத்து வந்தாள். அந்தக் குடுவையை திறந்து பார்த்தபோது, அதற்குள் இருந்த எறும்பு, ஒரு அரிசியை சாப்பிட்டுக் கொண்டிருந்தது. பார்வதி தேவிக்கு அதிர்ச்சியாக இருந்தது.

சிவபெருமானை மடக்க நினைத்தவர் திகைத்துவிட்டார். அதனை தொடர்ந்து சிவபெருமானிடம் பார்வதி தேவி மன்னிப்பை வேண்டினார்.

எல்லா ஜீவராசிகளுக்கும் ஏதோ ஒரு வழியில் படியளந்து விடுகிறார் இறைவன். மேற்கண்ட திருவிளையாடல் நடந்த நாள்-மார்கழி மாதத்தில் வருகிற தேய்பிறை அஷ்டமி திதி ஆகும். அன்றுதான் அஷ்டமி பிரதட்சணம் செய்யும் நாள். இதை உணர்த்துவதற்காகத்தான் இந்த படியளக்கும் லீலை மதுரையம்பதியில் திருவிழாவாக நடத்தப்படுகிறது.

Tags:    

Similar News