வழிபாடு

புரட்டாசி சனிக்கிழமைகளில் பஞ்சவடி பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு அன்னதானம்

Published On 2022-09-24 05:04 GMT   |   Update On 2022-09-24 05:04 GMT
  • அன்னதானம் மதியம் 12 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடைபெறும்.
  • புரட்டாசி மாத 4 சனிக்கிழமைகளிலும் சிறப்பு அன்னதானம் வழங்க ஏற்பாடு.

பஞ்சமுக ஜெயமாருதி சேவா அறக்கட்டளை தலைவர் மற்றும் அறங்காவலர் எம்.கோதண்டராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திண்டிவனம் - பாண்டிச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மத்திய திருப்பதி என்று அழைக்கப்படும் பஞ்சவடி பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலில் உள்ள ஸ்ரீவாரி வேங்கடாஜலபதிக்கு புரட்டாசி சனிக்கிழமைகளில் சிறப்பு சேவைகள் நடைபெற உள்ளன. வெள்ளிக்கிழமை காலையில் திருமஞ்சனமும், சனிக்கிழமை தோறும் சுவர்ணபுஷ்ப சிறப்பு சங்கல்பம் மற்றும் விசேஷ அர்ச்சனையும் நடைபெற உள்ளது. உலக நன்மை வேண்டி இந்த பூஜைகள் பஞ்சமுக ஜெயமாருதி சேவா அறக்கட்டளை மூலம் செய்யப்பட உள்ளது.

மேலும், புரட்டாசி மாத 4 சனிக்கிழமைகளிலும் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு மகா சிறப்பு அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அன்னதானம் மதியம் 12 மணி முதல் மதியம் 1.30 மணி வரை நடைபெறும். ஆகவே பக்தர்கள் மேற்படி பூஜைகளில் கலந்து கொண்டு இந்தச் சிறப்பு அன்னதானத்திலும் கலந்து கொள்ளுமாறு வேண்டுகிறோம்.

இந்த நிகழ்ச்ஜெயமாருதி சேவா அறக்கட்டளை தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர் எம்.கோதண்டராமன், செயலாளர் எஸ்.நரசிம்மன், உபதலைவர் ஆர்.யுவராஜன், அறங்காவலர்கள் எம்.பழனியப்பன், வி.கச்சபேஸ்வரன், ஜி.செல்வம், கே.வெங்கட்டராமன் மற்றும் ஆலய நிர்வாக அலுவலர் ஏ.பாலசுப்பிரமணியன் ஆகியோரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News