காரிமங்கலம் அருகே மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
- விநாயகர், ஜடை மாரியம்மன் கோவில் மூலஸ்தான கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் நடந்தது.
- சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே கயிறுகாரன் கொட்டாய் பகுதியில் செல்வ விநாயகர், ஜடை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
கணபதி ஹோமம், கணபதி பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து முதல் கால யாக பூஜை, அஷ்ட பந்தன மருந்து சாற்றுதல் ஆகியவை நடந்தது.
நேற்று காலை விக்னேஸ்வர பூஜை, 2-ம் காலயாக பூஜை, மகா பூர்ணா ஹுதி ஆகியவை நடந்தது. தொடர்ந்து விநாயகர், ஜடை மாரியம்மன் கோவில் மூலஸ்தான கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் நடந்தது.
திருப்பூர் சுப்பிரமணிய சிவாச்சாரியார் தலைமையில் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபி ஷேகத்தை நடத்தி வைத்தனர். தொடர்ந்து சுவாமி மற்றும் அம்மனுக்கு மகா அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது.
விழாவில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இன்று (19-ந் தேதி) முதல் மண்டல பூஜை நடக்கிறது. ஏற்பாடுகளை கோவுல் தர்மகர்த்தாக்கள், நிர்வாகக் கமிட்டியினர் மற்றும் விழா குழுவினர் செய்துள்ளனர்.