வழிபாடு

மகாதேவ மலையில் கிரிவலப் பாதை தொடக்க விழா

Published On 2022-07-15 04:42 GMT   |   Update On 2022-07-15 04:42 GMT
  • யோக நிலையில் அமர்ந்த சிவபெருமானின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.
  • மலைமீது புதிதாக அமைக்கப்பட்டு உள்ள பாதையில் கிரிவலம் நடைபெற்றது.

கே.வி.குப்பம் அடுத்த காங்குப்பம் மகாதேவ மலை மீது புதிதாக அமைக்கப்பட்டுள்ள கிரிவலப் பாதை தொடக்க விழா, பஞ்ச ரத உற்சவம் ஆரம்ப விழா ஆகியவை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மகாதேவமலை மகானந்த சித்தர் தலைமை தாங்கினார். ரத்தினகிரி பாலமுருகனடிமை சுவாமிகள், கலவை சச்சிதானந்த சுவாமிகள், ஸ்ரீபுரம் நாராயணி பீடம் சக்தி அம்மா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வேலூர் பாராளுமன்ற உறுப்பினர் டி.எம்‌.கதிர்ஆனந்த் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். பஞ்ச ரதங்களில் விநாயகர், சிவன் பார்வதி, வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமான், பைரவர், சனீஸ்வரர் ஆகிய உற்சவர்கள் அமர்த்தப்பட்டு, மலைமீது புதிதாக அமைக்கப்பட்டு உள்ள பாதையில் கிரிவலம் நடைபெற்றது. பாதையின் ஒரு பகுதியில் யோக நிலையில் அமர்ந்த சிவபெருமானின் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

மேள, தாள, இசை முழக்கங்களுடன் பக்தர்கள் அரோகரா கோஷ ஒலியுடன் கிரிவலம் சென்றனர். நிகழ்ச்சியின் நிறைவாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. நகழ்ச்சியில் மகானந்த சித்தர் கல்வி அறக்கட்டளை தலைவர் ஆற்காடு கே.பாஸ்கரன், கே.வி.குப்பம் ஒன்றியக் குழு தலைவர் லோ.ரவிச்சந்திரன், ஒன்றியகுழு உறுப்பினர்கள் கே.சீதாராமன், ஜெயாமுருகேசன். ஊராட்சி மன்ற தலைவர் சிவரஞ்சனி செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News