வழிபாடு

மாசித்திருவிழாவுக்கு தடை இல்லை: கோட்டை மாரியம்மன் கோவிலில் விரைவில் திருப்பணி தொடக்கம்

Published On 2023-03-05 05:54 GMT   |   Update On 2023-03-05 05:54 GMT
  • திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலின் திருப்பணிகள் விரைவில் தொடங்க இருக்கிறது.
  • அம்மனின் கருவறை மற்றும் கொடிமர மண்டபம் ஆகியவை முற்றிலும் கற்களால் ஆன கோவிலாக அமைக்கப்படும்.

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலின் மாசித்திருவிழா தற்போது நடைபெற்று வருகிறது. இந்த திருவிழாவில் நேற்று காலை வெண்ணை தாழி அலங்காரத்தில் அம்மன் புறப்பாடாகி வீதிஉலா நடந்தது. அதைத்தொடர்ந்து மாசித்திருவிழாவின் முக்கிய உற்சவ நிகழ்ச்சியான தசாவதாரம் நடந்தது. இதையொட்டி இரவு 10 மணி அளவில் தசாவதாரம் தொடங்கியது. இதில் காளி, மச்ச, கூர்ம என அடுத்தடுத்து தசாவதார காட்சிகள் இரவு முழுவதும் நடைபெற்றன.

இந்தநிலையில் இந்த ஆண்டு மாசித்திருவிழா நிறைவு பெற்றதும் கோட்டை மாரியம்மன் கோவிலின் திருப்பணிகள் தொடங்க இருப்பதாகவும், அந்த திருப்பணிகள் முடிவு பெறும் வரை மாசித்திருவிழா நடைபெறாது என்றம் தகவல் பொதுமக்களிடையே பரவியது. இதுகுறித்து கோவில் நிர்வாக பரம்பரை அறங்காவலர் சுபாஷினி கூறியதாவது:-

திண்டுக்கல் கோட்டை மாரியம்மன் கோவிலின் திருப்பணிகள் விரைவில் தொடங்க இருக்கிறது. இதையொட்டி அம்மனின் கருவறை மற்றும் கொடிமர மண்டபம் ஆகியவை முற்றிலும் கற்களால் ஆன கோவிலாக அமைக்கப்படும். இதற்கான வரைபடம் இந்துசமய அறநிலையத்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. வரைபட ஒப்புதல் கிடைத்தவுடன் திட்ட மதிப்பீடு செய்யப்படும். மேலும் இன்னும் 2 மாதங்களில் அதற்கான ஒப்புதல்கள் கிடைக்கும். அதன்பிறகு திருப்பணிகள் தொடங்கப்படும். அவ்வாறு திருப்பணிகள் தொடங்கப்பட்டாலும் அடுத்த ஆண்டு மாசித்திருவிழா எந்தவித தடையும் இன்றி ஒரு சில கட்டுப்பாடுகளுடன் தொடர்ந்து நடத்தப்படும் என்றார்.

Tags:    

Similar News