வழிபாடு

நள்ளிரவில் பெண்களால் மட்டும் இழுத்து செல்லப்பட்ட அம்மன் தேரை படத்தில் காணலாம்

திருவண்ணாமலையில் நள்ளிரவை தாண்டி அதிகாலை 4 மணி வரை நடந்த தேர் பவனி

Update: 2022-12-04 08:16 GMT
  • மாட விதிகளில் பக்தர்கள் வெள்ளத்தில் தேர் நீந்தி வந்தது.
  • இந்த தேர் பெண்களால் மட்டுமே இழுக்கப்படும்.

திருவண்ணாமலை கார்த்திகை தீப திருவிழா முன்னிட்டு நேற்று பஞ்ச மூர்த்திகள் தேர்த்திருவிழா நடைபெற்றது முதலில் விநாயகர் தேர் காலை 6 45க்கும் தொடங்கி 10 20க்கு நிலைக்கு வந்தன.

அதனைத் தொடர்ந்து முருகர் 10.35க்கும் தொடங்கி 2.50 மணிக்கு நிலைக்கு வந்த சேர்ந்தன. தொடர்ந்து அண்ணாமலையார் பெரிய தேர் மாலை 3. 47 க்கு தொடங்கியது பெரிய தேர் தொடங்கியது.

அப்போது அண்ணாமலையாருக்கு அரோகரா என்று விண்ணதிர கோஷம் மிட்டு பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுக்க தொடங்கினர்.

மாட விதிகளில் பக்தர்கள் வெள்ளத்தில் தேர் நீந்தி வந்தது. பின்பு இரவு 11 42 மணிக்கு நிலைக்கு வந்து அடைந்தன இதனைத் தொடர்ந்து அம்மன் தேர் நள்ளிரவு ஒரு மணிக்கு தொடங்கியது. இந்த தேர் பெண்களால் மட்டுமே இழுக்கப்படும். இது தேர் மாட வீதியை உலா வந்து விடியற்காலை 4 மணிக்கு வந்து நிலைக்கு சேர்ந்தன. இதனுடன் சண்டிகேஸ்வரர் தேரும் வலம் வந்தது.

Tags:    

Similar News