உவரி சுயம்பு லிங்கசுவாமி கோவில் மூலவர் மீது விழுந்த சூரிய ஒளி
மார்கழி மாதத்தில் நடக்கும் அதிசயம் - உவரி சுயம்பு லிங்கசுவாமி மூலவர் மீது சூரிய ஒளி விழுந்தது
- சுமார் 10 நிமிடம் வரை நீடித்த இந்த நிகழ்ச்சியை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.
- திருப்பள்ளி எழுச்சி சிறப்பு அபிஷேகம், உதயமார் தாண்ட பூஜை, பிரசாதம் வழங்குதல் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது.
தமிழ்நாட்டில் உள்ள பழமையான சிவ ஆலயங்களில் நெல்லை மாவட்டம் உவரி சுயம்பு லிங்கசுவாமி கோவிலும் ஒன்றாகும்.
வங்க கடலோரம் சுவாமி சுயம்புவாக தோன்றிய இக்கோவிலில் ஆண்டுதோறும் மார்கழி மாதம் முழுவதும் அதிகாலையில் சூரிய ஒளியானது மூலவர் சுயம்பு லிங்கசுவாமி கோவில் மூலவர் மீது விழும் அதிசய நிகழ்வு நடைபெறும்.
அதன்படி மார்கழி 2-ந் தேதியான இன்று அதிகாலையில் சூரிய உதயத்தை தொடர்ந்து கோவில் மூலவர் மீது காலை 6.35 மணிக்கு கோவிலில் உள்ள மூலவர் மீது சூரிய ஒளி விழுந்தது.
சுமார் 10 நிமிடம் வரை நீடித்த இந்த நிகழ்ச்சியை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர். சிவபெருமானை சூரியன் வழிபடுவதாக நெகிழ்சியுடன் தெரிவித்தனர்
முன்னதாக மார்கழி மாதத்தையொட்டி கோவில் நடை அதிகாலை திறக்கப்பட்டது. தொடர்ந்து திருப்பள்ளி எழுச்சி சிறப்பு அபிஷேகம், உதயமார் தாண்ட பூஜை, பிரசாதம் வழங்குதல் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது.
நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கடல் மண்ணை பெட்டியில் சுமந்து அதை கடற்கரையில் கொட்டி நேர்த்தி கடன் செலுத்தினர். ஏற்பாடுகளை கோவில் பரம்பரை தர்மகர்த்தா ராதாகிருஷ்ணன் செய்திருந்தார்.