வழிபாடு
null

தாலி அறுவது போல் கனவு வந்தால் நல்லதா? கெட்டதா?

Published On 2024-05-27 08:27 GMT   |   Update On 2024-05-28 04:08 GMT
  • நம் வாழ்க்கையில் நடக்கும் கெட்ட விஷயங்கள் அனைத்தும் ஏதோ ஒரு வகையில் நல்லதுக்கே என்று எடுத்துக்கொள்ளுவது தான் புத்திசாலிதனம்.
  • காதல் வயப்படாத பெண்ணாக இருந்தால் காதல் வலையில் விழாமல் இருப்பது மிகவும் நல்லது.

உறங்கும் நிலையில் அனைவருக்கும் இயல்பாக வருவது தான் இந்த கனவு. உலகத்தில் கனவு நிலை வராதவர்கள் யாரும் இல்லை. ஒரு சில சமயங்களில் நம்மை மீறியும் ஏதேனும் ஒரு சக்தி ஆபத்தில் இருக்கும்போது நம்மை பாதுகாக்கும் என்று முன்னோர்கள் கூறியிருக்கிறார்கள். ஆனால் இது அனைத்து கனவுகளுக்கும் ஒத்துபோகுமா என்று கேட்டால் யாருக்கும் தெரியாத ஒன்றாகும். குறிப்பாக நாம் காணும் சில கனவுகள் நம்மை சில ஆபத்திலிருந்து காப்பாற்றி விட்டுருக்கும். நம் வாழ்க்கையில் நடக்கும் கெட்ட விஷயங்கள் அனைத்தும் ஏதோ ஒரு வகையில் நல்லதுக்கே என்று எடுத்துக்கொள்ளுவது தான் புத்திசாலிதனம்.

தாலி, குங்குமம், திருமண மோதிரம், மெட்டி, மாலை போன்றவை தவறி கீழே விழுந்தால் அது நம் அனைவரின் மனதிலும் கெட்ட செயலாக தான் தோன்றும். அந்த சமயத்தில் ஏதேனும் பதற்றங்கள் அதிகமாக ஏற்படும். நமக்கு கெட்ட செயல் நடக்கும்போது தான் கோவிலில் உள்ள அனைத்து தெய்வங்களையும் நாம் கூப்பிடுவது வழக்கம். திருமணம் ஆன பெண்ணிற்கு தாலி கழன்று விழுவது போன்று கனவு வந்தால் என்ன பலன், திருமணம் ஆகாத பெண்ணிற்கு தாலி விழுவது போன்று கனவு வந்தால் என்ன அர்த்தம் என்று தெரிந்துகொள்ளலாம்.


திருமணம் ஆன பெண்ணிற்கு தாலி அறுவது போல் கனவு வந்தால்:

திருமணம் ஆன பெண்ணிற்கு கனவில் தாலி அறுவது போல் கனவு வருவது இயல்பான ஒன்றுதான். தாலி அறுவது போன்று கனவு வந்தால் திருமணம் ஆன பெண்ணிற்கு அவருடைய கணவனின் மீது கோபம் கூட இருக்கலாம். அல்லது வீட்டில் கணவன்மார்கள் அந்த பெண்ணிடம் சண்டைகள் எதுவும் போட்டு இருக்கலாம்.

அதுமட்டும் இல்லாமல் வீட்டில் ஏதேனும் பிரச்சனைகள் நிகழ்ந்து இருக்கும். இதில் எதுவும் இல்லையென்றால் கணவனிடம் அந்த பெண்ணிற்கு ஏதேனும் பிடிக்காமல் இருந்து இருக்கலாம். பெண்களுக்கு தாலி அறுந்து விழுவது போன்று கனவு வந்தால் அச்சம் கொள்ளவேண்டிய அவசியம் இல்லை.

திருமணம் ஆகாத பெண்ணிற்கு தாலி அறுவது போல் கனவு வந்தால்:

திருமணம் ஆகாத பெண்ணிற்கு கனவில் தாலி அறுவது போன்று வந்தால் அது இயற்கைக்கு மாறான ஒரு விஷயமாகும். தாலி அறுவது போல் கனவு வந்தால் அந்த பெண்ணிற்கு எந்த ஒரு சிந்தனை செயல்களும் அவர்களிடத்தில் இருக்காது. பிறகு ஏன் இந்த கனவு வர வேண்டும் என்ற கேள்வி அனைவரிடத்திலும் உள்ளதுதான்.

தாலி அறுவது போன்ற கனவு திருமணம் ஆகாத பெண்ணிற்கு வந்தால் அவர்களுக்கு திருமணம் பற்றிய பயமும், பதற்றமும் ஆழ்மனதில் அவர்களுக்கிடையில் அறியாமல் இருக்கும்.


திருமணம் செய்யும் நேரம்:

உதாரணத்திற்கு அந்த பெண்ணிற்கு வீட்டில் வரன் பார்த்து கொண்டிருப்பார்கள். திருமணம் ஆகாத பெண்ணிற்கு இது போன்று கனவு வந்தால் நடக்கவிருக்கும் திருமணத்தில் ஏதோ ஒரு ஆபத்து உள்ளது என்ற அறிகுறியாகும். உள்மனதில் அந்த பெண்ணிற்கு இப்போது திருமணம் நிச்சயிக்க வேண்டாம் என்று கூறுவதாகும்.

வர போகும் ஆபத்தில் இருந்து அந்த பெண்ணை பாதுகாப்படைய செய்கிறது. இது போன்று உள்ளவர்களுக்கு இப்போது திருமணம் நிச்சயிக்காமல் இருப்பது நல்லது. காதல் வயப்படாத பெண்ணாக இருந்தால் காதல் வலையில் விழாமல் இருப்பது மிகவும் நல்லது.

6 மாதம் பொருத்திருந்து அதன் பின்னர் தாலி அறுவது போன்று கனவு வருகிறதா என்று பார்த்து, கனவு வரவில்லை என்றால் அதன் பிறகு திருமண பேச்சை பற்றி யோசிக்கலாம். திருமணம் ஆகாத பெண்ணிற்கு இது போன்று வருவதால் அந்த பெண்ணிற்கு திருமணத்தில் பிரச்சனை ஏற்படப்போகிறது என்று கனவு மூலம் இறைவன் காட்டுகிறார்.

அந்த பெண்ணிற்கு திருமணத்தில் அவசரம் காட்டக்கூடாது என்று அர்த்தமாகும். இது போன்ற சூழலில் யார் மீதும் காதல் கொள்வது, புதிதாக வரன்கள் பார்ப்பதை தவிர்த்து கொள்ளவேண்டும். கனவுகளில் பல வகையான கனவுகள் உள்ளன. அவைகள் அனைத்திற்கும் அர்த்தம் இருக்கிறது என்று கூறமுடியாது. ஆனால் சில கனவுகளுக்கு அர்த்தம் இருக்கலாம் என்றும் கூறுகிறார்கள்.

Tags:    

Similar News