வழிபாடு

திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஜூலை, ஆகஸ்டு மாதங்களுக்கான ரூ.300 டிக்கெட் 24-ந்தேதி வெளியீடு

Published On 2023-05-21 06:29 GMT   |   Update On 2023-05-21 06:29 GMT
  • பக்தர்கள் சுமார் 12 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
  • ரூபாய் 300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் சுமார் இரண்டு மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

கோடைகால விடுமுறை என்பதால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து உள்ளது. இதனால் பல மணி நேரம் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

இன்று காலை நிலவரப்படி வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸில் உள்ள 29 அறைகளில் பக்தர்கள் காத்திருந்தனர்.

இவர்கள் சுமார் 12 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். ரூபாய் 300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் சுமார் இரண்டு மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.

திருப்பதி ஏழுமலையானை ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதங்களில் தரிசிக்க, அந்த மாதங்களுக்கான ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகளை திருப்பதி தேவஸ்தானம் 24-ந்தேதி காலை 10 மணிக்கு வெளியிடுகிறது.

பக்தர்கள் இதைக் கவனித்து, திருமலை-திருப்பதி தேவஸ்தான இணையதளமான https://tirupatibalaji.ap.gov.in -ல் தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து குறிப்பிட்ட நாளில் திருமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்யலாம்.

மேற்கண்ட தகவலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் நேற்று 85,297 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

37,392 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தியுள்ளனர். கோவில் உண்டியலில் செலுத்திய காணிக்கை இரவு எண்ணப்பட்டது இதில் ரூ.3.71 கோடி காணிக்கையாக கிடைத்தது.

Tags:    

Similar News