வழிபாடு

திருவாதிரை திருவிழாவையொட்டி திருவாரூர் தியாகராஜர் கோவிலில் பாத தரிசன நிகழ்ச்சி

Published On 2026-01-03 14:49 IST   |   Update On 2026-01-03 14:49:00 IST
  • பாத தரிசனம் கண்டால் பாவங்கள் நீங்கி புண்ணியம் பெறலாம் என்பது ஐதீகம்.
  • பதஞ்சலி வியாக்ரபாத முனிவர்களுக்கு பாத தரிசனம் அருளும் நிகழ்ச்சியும் நடந்தது.

திருவாரூர் தியாகராஜர் கோவில் சைவ சமயத்தின் தலைமையிடமாக திகழ்கிறது. பஞ்ச பூதங்களில் பூமிக்குரியதும், பிறந்தாலும் பெயர் சொன்னாலும் முக்தி அளிக்கிற தலமாகவும், சர்வதோஷ பரிகார தலமாக விளங்குகிறது.

இத்தகைய பல்வேறு பெருமை வாய்ந்த கோவிலில் ஆண்டிற்கு 2 முறை தியாகராஜர் சாமி பாத தரிசனம் அருளும் நிகழ்ச்சி நடைபெறும். பாத தரிசனம் கண்டால் பாவங்கள் நீங்கி புண்ணியம் பெறலாம் என்பது ஐதீகம்.

அதன்படி இன்று திருவாதிரை திருவிழாயொட்டி பாத தரிசன விழா நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி தியாகராஜா சாமிக்கு திருவாதிரை திருவிழா மகா அபிஷேகம் நடந்தது. அதனைதொடர்ந்து பதஞ்சலி வியாக்ரபாத முனிவர்களுக்கு பாத தரிசனம் அருளும் நிகழ்ச்சியும் நடந்தது.

 

பின்னர் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று பாத தரிசனம் செய்தனர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுமார் 2 கிலோ மீட்டர் தூரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அதிகாரி தலைமையில் பணியாளர்கள் செய்து இருந்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News