வழிபாடு

சந்திர கிரகணம் - திருப்பதி கோவிலில் 10½ மணி நேரம் நடைஅடைப்பு

Published On 2026-01-05 08:20 IST   |   Update On 2026-01-05 08:20:00 IST
  • சந்திர கிரகணம் தொடங்குவதற்கு 6 மணி நேரத்துக்கு முன்பே கோவில் நடைகளை மூடும் பாரம்பரியம் உள்ளது.
  • மாற்றங்களை கவனத்தில் கொண்டு பக்தர்கள் தங்கள் தரிசன திட்டங்களை அமைத்துக் கொள்ள வேண்டும்.

திருப்பதி தேவஸ்தானம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வருகிற மார்ச் மாதம் 3-ந்தேதி மாலை 3.20 மணியில் இருந்து மாலை 6.47 மணி வரை சுமார் 3½ மணி நேரம் சந்திர கிரகணம் நிகழ்கிறது. சந்திர கிரகணம் தொடங்குவதற்கு 6 மணி நேரத்துக்கு முன்பே கோவில் நடைகளை மூடும் பாரம்பரியம் உள்ளது.

அதன்படி, மார்ச் மாதம் 3-ந்தேதி காலை 9 மணியில் இருந்து இரவு 7.30 மணி வரை திருப்பதி ஏழுமலையான் கோவில் நடை அடைக்கப்படுகிறது. கோவில் சுத்தி உள்ளிட்ட பரிகாரச் சடங்குகள் முடிந்ததும் இரவு 8.30 மணிக்கு பிறகு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

சந்திர கிரகணம் காரணமாக கோவிலில் மார்ச் மாதம் 3-ந்தேதி நடக்க இருந்த அஷ்டதல பாதபத்மாராதனை சேவை, கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீபலங்காரச் சேவை ஆகியவை ரத்து செய்யப்படுகின்றன. இந்த மாற்றங்களை கவனத்தில் கொண்டு பக்தர்கள் தங்கள் தரிசன திட்டங்களை அமைத்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News