வழிபாடு
சாமிதோப்பு வைகுண்டசாமி தலைமைப்பதி

சாமிதோப்பு வைகுண்டசாமி தலைமைப்பதியில் வைகாசி திருவிழா 27-ந்தேதி தொடங்குகிறது

Published On 2022-05-24 07:52 GMT   |   Update On 2022-05-24 07:52 GMT
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமை ப்பதியில் வைகாசி திரு விழா வருகிற 27-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
சாமிதோப்பில் அய்யா வைகுண்ட சுவாமி தலை மைப்பதி உள்ளது. இங்கு வருடந்தோரும் தை,ஆவணி மற்றும் வைகாசி மாதங்களில் 11 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

இந்த வருட வைகாசி திருவிழா வருகிற 27-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை கொடியேற்றத்துடன் துவங்குகிறது.

விழா தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறுகிறது. முதல் நாள் கொடியேற்ற நிகழ்ச்சியில் அதி காலை 4 மணிக்கு முத்திரிப தமிடுதலும், 5 மணிக்கு சிறப்பு பணிவிடையும், 6 மணிக்கு திருக்கொடி ஏற்றும் நிகழ்ச்சியும் நடை பெறுகிறது.

திருக்கொடியை பால. ஜனாதிபதி ஏற்றி வைக்கிறார். பால. லோகாதிபதி, பையன் கிருஷ்ணராஜ் ஆகியோர் முன்னிலை வகிக்கி ன்றனர். பள்ளியறை பணிவிடைகளை ஜனா.யுகேந்த், ஜனா.வைகுந்த் ஆகியோர் செய்கின்றனர். பகல் 12 மணிக்கு வடக்கு வாசலில் அன்னதர்மம் நடைபெறுகிறது அன்று இரவு 7 மணிக்கு அய்யா தொட்டில் வாகனத்தில் பவனி வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

இரண்டாம் நாள் இரவு அய்யா வைகுண்ட சுவாமி பரங்கி நாற்காலியில் வீதி வலம் வரும் நிகழ்ச்சியும், மூன்றாம் நாள் விழாவில் அய்யா அன்னவாகனத்தில் வெள்ளை சாத்தி வீதி வலம் வரும் நிகழ்ச்சியும்,

4-ம் நாள் பூஞ்சப்பர வாகனத்தில் அய்யா வலம் வரும் நிகழ்ச்சியும், 5-ம் நாள் பச்சை சாத்தி சப்பரவாகனத்தில் பவனி யும், 6-ம் நாள் கற்பக வாகன பவனியும், 7-ம் நாள் சிவப்பு சாத்தி கருடவா கனத்தில் வாகன பவனியும் நடைபெறுகிறது.

வருகிற 3-ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 8-ம் திருவிழா நடைபெறு கிறது. அன்று மாலை 5 மணிக்கு அய்யா வைகுண்டசுவாமி வெள்ளை குதிரை வாகனத்தில் எழுந்தருளி முத்திரிகிணற்றங்கரையில் கலி வேட்டையாடும் நிகழ்ச்சியும், தொடர்ந்து பல கிராமங்களுக்கு குதிரை வாகனத்தில் சென்று மக்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சியும் நடைபெறு கிறது.

தொடர்ந்து இரவு 11 மணிக்கு வடக்கு வாச லில் அய்யாவின் தவக்கோல காட்சியும் தொடர்ந்து அன்னதா னமும் நடைபெறு கிறது. 9-ம் திருவிழாவில் அனுமன் வாகனத்திலும், 10-ம் நாள் இந்திரா வாகனத்திலும் அய்யா பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அடுத்த மாதம் 6-ந்தேதி திங்கள் கிழமை 11-ம் திருவிழா நடைபெறுகிறது.

அன்று நண்பகல் 12 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. அன்று இரவு ரிஷப வாகனத்தில் அய்யா வீதிஉலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

திருவிழா நாட்களில் தினமும் காலை மாலை பணிவிடையும் மதியம் உச்சி படிப்பும் இரவு வாகன பவனியும் அன்னதானமும் கலை நிகழ்ச்சிகளும் நடை பெறுகிறது.
Tags:    

Similar News