ஆன்மிகம்

திருச்செந்தூருக்கு பக்தர்கள் பாதயாத்திரை

Published On 2019-02-14 04:12 GMT   |   Update On 2019-02-14 04:12 GMT
திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் மாசி திருவிழாவையொட்டி குமரி மாவட்டத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் காவடி ஊர்வலமாக சென்று நேர்த்தி கடனை செலுத்தி வருகிறார்கள்.
திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் மாசி திருவிழாவையொட்டி குமரி மாவட்டத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் காவடி ஊர்வலமாக சென்று நேர்த்தி கடனை செலுத்தி வருகிறார்கள்.

இந்தநிலையில் நேற்று கன்னியாகுமரியில் மறக்குடி தெருவில் உள்ள சுப்பிரமணியசாமி கோவில், வடக்குரதவீதியில் உள்ள முத்தாரம்மன் கோவில், வடக்கு தெருவில் உள்ள பிரானோபகாரி தர்ம மடம் சுப்பிரமணியசாமி கோவில், கற்பக விநாயகர் கோவிலில் இருந்து ஏராளமான பக்தர்கள் காவடியுடன் திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக புறப்பட்டனர்.

இந்த பக்தர்கள் பாதயாத்திரையாக அஞ்சுகிராமம், செட்டிகுளம், கூடங்குளம், நவலடி, திசையன்குளம், உடையன்குடி வழியாக திருச்செந்தூர் கோவிலை சென்றடைகிறார்கள்.
Tags:    

Similar News