ஆன்மிகம்
திருப்பதியில் ஊடல் உற்சவம் நடந்த காட்சி.

திருப்பதியில் ஊடல் உற்சவம் - திரளான பக்தர்கள் பங்கேற்பு

Published On 2018-12-24 13:03 IST   |   Update On 2018-12-24 13:03:00 IST
திருப்பதியில் ஆண்டுதோறும் மார்கழி மாத பவுர்ணமியின் போது ஊடல் உற்சவம் நிகழ்ச்சி நடத்தப்படும். அதன்படி திருமலையில் இந்த உற்சவம் நடந்தது.
திருப்பதியில் ஆண்டுதோறும் மார்கழி மாத பவுர்ணமியின் போது ஊடல் உற்சவம் நிகழ்ச்சி நடத்தப்படும். அதன்படி திருமலையில் நேற்று மாலை இந்த உற்சவம் நடந்தது.

எப்போதும் தன்னிடம் வரும் அடிகளார்கள் மற்றும் பக்தர்கள் மீது கருணை கொண்டு அவர்களுக்கு அருள் புரிவதிலேயே ஏழுமலையான் கவனம் செல்வதால் அவர் ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியார்களைக் காண செல்வதில்லை.

அதனால் ஏழுமலையான் மீது பொய்க் கோபம் கொள்ளும் நாச்சியார்கள், ஏழுமலையான் வரும்போது அவரை உள்ளே வர அனுமதிக்காமல் அவருடன் அன்புடன் சண்டையிட்டுக் கொள்வதை ஊடல் உற்சவமாக நடந்து வருகிறது.

இதையொட்டி, ஸ்ரீதேவி பூதேவி நாச்சியார்கள் ஒருபுறமும், மலையப்ப சாமி எதிர்புறமும் நின்று கொண்டு தாயார்கள் ஏழுமலையான் மீது பூப்பந்து எறிந்து கோபத்தை வெளிப்படுத்தினர். இருபுறமும் அர்ச்சகர்கள் நின்றுகொண்டு பூப்பந்துகளை எரியும் சடங்கில் ஈடுபட்டனர்.

மேலும் ஏழுமலையான் மீது நிந்தஸ்துதியில் பாடல்களைப் பாடி அவரிடமுள்ள கோபத்தை தெரியப்படுத்துவர்.

அதன்பின் மலையப்ப சாமி அவர்களை சமாதானப்படுத்தி கோவிலுக்குள் அழைத்து சென்றார். நிகழ்ச்சியில், பக்தர்கள், தேவஸ்தான அதிகாரிகள், ஊழியர்கள், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News