search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "urchavam"

    அதைத்தொடர்ந்து மாலை ஏழுமலையான் கோவிலில் கோதாதேவி பரிநய உற்சவம் நடந்தது. பெரிய ஜீயர் சுவாமிகள் மடத்தில் வைத்து மாலைகளுக்குச் சிறப்புப்பூஜைகள் போடப்பட்டது.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பார்வேடு உற்சவமும், கோதாதேவி பரிநய உற்சவமும் நடந்தது. அதையொட்டி நேற்று மதியம் 1 மணியளவில் கோவிலில் இருந்து உற்சவர்களான மலையப்பசாமி, ஸ்ரீகிருஷ்ணர் ஆகியோர் 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பார்வேடு மண்டபத்துக்கு மேள தாளம் முழங்க ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டனர்.

    அங்கு, உற்சவர்களுக்கு அபிஷேகம், அலங்காரம், சிறப்புப் பூஜை ஆகியவைகள் நடந்தது. அப்போது நைவேத்தியம் செய்த பொருட்களை பக்தர்களுக்கு அர்ச்சகர்கள் பிரசாதமாக வழங்கினார்கள்.

    பார்வேடு மண்டபத்தில் இருந்து உற்சவர்கள் புறப்படும்போது, அர்ச்சகர்கள் ஈட்டியை கையில் எடுத்துக் கொண்டு ஓடி விலங்குகளை வேட்டையாடுபோல் நடித்து ஈட்டியை வீசி எறிந்து, சிறிது தூரம் ஓடி வந்தனர்.

    அதைத்தொடர்ந்து மாலை ஏழுமலையான் கோவிலில் கோதாதேவி பரிநய உற்சவம் நடந்தது. அதையொட்டி காலை 9 மணியளவில் திருப்பதி கோவிந்தராஜசாமி கோவிலில் இருந்து ஆண்டாள் சூடிய மாலைகளை திருமலையில் உள்ள பெரிய ஜீயர் சுவாமிகள் மடத்துக்குக் கொண்டு வரப்பட்டது. அங்கு வைத்து மாலைகளுக்குச் சிறப்புப்பூஜைகள் போடப்பட்டது.

    அந்த மாலைகளை கூடைகளில் வைத்து கோவிலின் நான்கு மாடவீதிகளில் ஊர்வலமாக எடுத்து வந்து, மூலவர் வெங்கடாசலபதிக்கு அர்ச்சகர்கள் அணிவித்தனர். அத்துடன் கோதாதேவி பரிநய உற்சவம் முடிந்தது. அதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    திருப்பதியில் ஆண்டுதோறும் மார்கழி மாத பவுர்ணமியின் போது ஊடல் உற்சவம் நிகழ்ச்சி நடத்தப்படும். அதன்படி திருமலையில் இந்த உற்சவம் நடந்தது.
    திருப்பதியில் ஆண்டுதோறும் மார்கழி மாத பவுர்ணமியின் போது ஊடல் உற்சவம் நிகழ்ச்சி நடத்தப்படும். அதன்படி திருமலையில் நேற்று மாலை இந்த உற்சவம் நடந்தது.

    எப்போதும் தன்னிடம் வரும் அடிகளார்கள் மற்றும் பக்தர்கள் மீது கருணை கொண்டு அவர்களுக்கு அருள் புரிவதிலேயே ஏழுமலையான் கவனம் செல்வதால் அவர் ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியார்களைக் காண செல்வதில்லை.

    அதனால் ஏழுமலையான் மீது பொய்க் கோபம் கொள்ளும் நாச்சியார்கள், ஏழுமலையான் வரும்போது அவரை உள்ளே வர அனுமதிக்காமல் அவருடன் அன்புடன் சண்டையிட்டுக் கொள்வதை ஊடல் உற்சவமாக நடந்து வருகிறது.

    இதையொட்டி, ஸ்ரீதேவி பூதேவி நாச்சியார்கள் ஒருபுறமும், மலையப்ப சாமி எதிர்புறமும் நின்று கொண்டு தாயார்கள் ஏழுமலையான் மீது பூப்பந்து எறிந்து கோபத்தை வெளிப்படுத்தினர். இருபுறமும் அர்ச்சகர்கள் நின்றுகொண்டு பூப்பந்துகளை எரியும் சடங்கில் ஈடுபட்டனர்.

    மேலும் ஏழுமலையான் மீது நிந்தஸ்துதியில் பாடல்களைப் பாடி அவரிடமுள்ள கோபத்தை தெரியப்படுத்துவர்.

    அதன்பின் மலையப்ப சாமி அவர்களை சமாதானப்படுத்தி கோவிலுக்குள் அழைத்து சென்றார். நிகழ்ச்சியில், பக்தர்கள், தேவஸ்தான அதிகாரிகள், ஊழியர்கள், உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
    ×