ஆன்மிகம்

திருவானைக்காவலில் கோவில் நாளை 2-ம் கட்ட கும்பாபிஷேகம்

Published On 2018-12-11 06:14 GMT   |   Update On 2018-12-11 06:14 GMT
திருவானைக்காவலில் இரண்டாம் கட்டமாக ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி மூலவர் சன்னதிகள் மற்றும் ராஜகோபுரம் மகா கும்பாபிஷேகம் நாளை (புதன்கிழமை) நடைபெற உள்ளது.
பஞ்சபூதங்களில் நீர் தலமாக விளங்கும் திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலில் முதல் கட்டமாக பரிவார மூர்த்திகள் கும்பாபிஷேகம் நேற்று முன்தினம் நடைபெற்றது.

இரண்டாம் கட்டமாக ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி மூலவர் சன்னதிகள் மற்றும் ராஜகோபுரம் மகா கும்பாபிஷேகம் நாளை (புதன்கிழமை) காலை 6.30 மணிக்கு மேல் 7.15 மணிக்குள் நடைபெற உள்ளது.

கும்பாபிஷேகத்தையொட்டி மூலவர் ஜம்புகேஸ்வரர், அகிலாண்டேஸ்வரி சன்னதி விமான தங்க கலசங்கள் புதுப்பொலிவு பெற்று உள்ளன. கும்பாபிஷேக விழாவில் பங்கேற்பதற்காக தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 7.40 மணிக்கு விமானம் மூலம் திருச்சி வருகிறார்.

சுற்றுலா மாளிகையில் தங்கும் அவர் இன்று இரவே ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார்.
Tags:    

Similar News