ஆன்மிகம்

ராமருக்கு உகந்த ராமா ராமா ராமா என்ற நாமம்..

Published On 2017-06-09 14:52 IST   |   Update On 2017-06-09 14:52:00 IST
குடும்பத்தில் சந்தோஷம் நிலவ கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஸ்லோகத்தை தினமும் அல்லது ராமருக்கு உகந்த நாட்களில் சொல்லி வந்தால் பலன் அடையலாம்.
ராமா ராமா ராமா என்று நாமம் சொல்லி பாடனும்
நாமம் சொல்லி பாடனும்- நாவிலே
வராது போனால் நல்லவரோடு சேரனும்.

எண்ணி எண்ணி பார்க்கனும்
ஏகாந்தமாய் இருக்கனும் (2)
என்றும் அவன் ஸ்வரூபத்தில் ஈடுபட்டிருக்கனும்.

விட்டல், விட்டல், விட்டல் என்று கையைத் தட்டி பாடனும்
கையைத் தட்டி பாடனும்- கையை
தட்ட வராவிட்டால் கூட்டத்தோடு சேரனும்

எண்ணி எண்ணி பார்க்கனும்
ஏகாந்தமாய் இருக்கனும் (2)
என்றும் அவன் ஸ்வரூபத்தில் ஈடுபட்டிருக்கனும்.

கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா என்று பஜனை செய்து பாடனும்
பஜனை செய்து பாடனும் - பஜனை
செய்ய வராவிட்டால் பக்தரோடு சேரனும்.

எண்ணி எண்ணி பார்க்கனும்
ஏகாந்தமாய் இருக்கனும் (2)
என்றும் அவன் ஸ்வரூபத்தில் ஈடுபட்டிருக்கனும். (ராமா)

Similar News