ஆன்மிகம்

சனிபகவான் அருள் கிடைக்க மந்திரங்கள்

Published On 2017-05-24 07:59 GMT   |   Update On 2017-05-24 07:59 GMT
சனி தோஷம் சனி திசை நடப்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஸ்லோகங்களைக் கூறுவதன் மூலம் சனிபகவானின் பரிபூரண அருளைப் பெறலாம்.
சனீஸ்வர காயத்ரி :

ஓம் சனைச்சராய வித்மஹே
சாயாபுத்ராய தீமஹி
தந்நோ: மந்தப்ரசோதயாத்
ஓம் காக த்வஜாய வித்மஹே
கட்க ஹஸ்தாய தீமஹி
தந்நோ மந்த: ப்ரசோதயாத்

ஸ்லோகம் :

நீலாம்பரோ, நீலவபு: கிரீடி
க்ருத்ரஸ்தித: சத்ராஸக ரோ தநுஷ்மான்
சதுர்புஜ: ஸுர்யஸு: ப்ரசாந்த:
ஸதாஸ்து மஹ்யம் வரத: ப்ரஸன்ன:

பொருள் : மிகவும் சாந்தமானவரும், வரத்தை அளிப்பவருமான சனி பகவானைத் தியானம் செய்தால் ஆயுள் விருத்தி, விவசாயத்தில் மேன்மை, எருமை விருத்தி, இரும்புத் தொழில்கள், செங்கல் காளாவாயினால் லாபம் ஏற்பட, உத்தியோகம் செய்யும் இடத்தில் மனநிம்மதி ஏற்பட வேலைக்காரர்களால் நன்மை பெற, எலும்பு, பற்கள், கணை சம்பந்தமான நோய்கள் வராமல் இருக்க, சளி, நெஞ்சுக் கட்டு, வாத நோய்கள் தடுக்க, சட்டபூர்வமான தண்டனை, சிறைவாசம், கட்டுப்படுதல், சில சமயங்களில் விபத்துக்கள், மனோதைரியம் இழந்து தடுமாறுதல், சித்தப்பிரமை, மேகநீர் உபத்திரவம் ஏற்படாமல் இருக்க போன்றவை நெருங்காமல் தடைபடும்.



சனி ஸ்தோத்திரம் :

ஸூர்யபுத்ரோ தீர்க்கதேஹோ விசாலாக்ஷ: ஸிவப்ரிய:
தீர்க்கசார: ப்ரஸந்நாத்மா பீடாம்ஹரதுமே ஸனி:

சூர்யபுத்திரனும், நீண்டதேஹமுள்ளவனும், சிவப்ரியனும் தெளிந்த மனம் உள்ளவனுமான சனீஸ்வரபகவான் என்னுடைய தோஷத்தை போக்க வேண்டும்.

சனி வழிபாடு :

நீலாஞ்ஜன ஸமாபாஸம் ரவிபுத்ரம யமாக்ரஜம்
சாயா மார் தாண்டஸம்பூதம் தம் நமாமி சனைச்சரம்

சனீஸ்வர ஸ்தோத்ரம் :


ஸன்னோதேவீசரபிஷ்டய ஆபோ பவந்து பீதயே
ஸம்யோ ரபிஸ்ர வந்துந:

சனி கோசார ரீதியால் பன்னிரண்டு, எட்டு முதலிய ஸ்தானங்களில் இருப்பதாலும், ஜாதகத்தில் தோஷத்துடன் கூடியிருப்பதாலும், சனி தசாபுக்திகளிலும் ஏற்படும் கஷ்டங்கள் விலகுவதுடன், சர்வ சம்பத்துகளும் உண்டாகும்.

சனிக்கிழமை தோறும் இந்த ஸ்தோத்திரத்தை ஜபிப்போர்க்கு சனிபகவானால் வரும் துன்பம் விலகும். உளுந்து, எள், எண்ணெய், வெல்லம் இவற்றைத் தானம் செய்வது சனிபகவானுக்குப் ப்ரீதியானதாகும். இந்த சுலோகத்தை சனிக்கிழமைகளில், அரச மரத்தடியில் அமர்ந்து படிப்பது மிகவும் விசேஷமாகும்!
Tags:    

Similar News