ஆன்மிகம்

பஞ்சம், பட்டினியற்ற வாழ்வு தரும் காசி விஸ்வநாதர் ஸ்லோகம்

Published On 2017-05-02 09:41 GMT   |   Update On 2017-05-02 09:41 GMT
கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஸ்லோகம் காசி விஸ்வநாதர் சந்நதியில் தினமும் அர்த்தஜாம பூஜையில் பாராயணம் செய்யப்படும். இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி பலன் பெறலாம்.
மன்மாதா ஸஸிசேகரோ மம பிதா ம்ருத்யுஞ்ஜயோ மத்குரு:
ந்யக்ரோதத்ரும மூலவாஸாஸிகோ மத் ஸோதர: ஸங்கர:
மத்பந்துஸ்த்ரிபுராந்தகோ மம ஸகா கைலாஸசைலாதிப:
மத்ஸ்வாமீ பரமேஸ்வரோ மம கதி: ஸாம்ப: ஸிவோ நேதர:
- சாம்பசிவ த்யானம்.



பொதுப்பொருள்:

பிறைசூடிய பெருமானே, நீங்களே என் தாய். யமனை வென்ற ஈசனே, நீங்களே என் தந்தை. ஆலமரத்தடியில் அமர்ந்து தட்சிணாமூர்த்தியாக விளங்கும் நீங்களே எனக்கு ஆசான். உலகுக்கே மங்களம் செய்விக்கும் மகாதேவனே, நீங்களே என் சகோதரன். த்ரிபுர சம்ஹாரம் செய்த ருத்ரனே நீங்களே எனக்கு உறவினர். கயிலாய மலையின் அதிபரே, நீங்களே என் தோழர். பரமேஸ்வரனே, நீங்களே என் தெய்வம். அம்பாளின் கருணையும் சேர்த்து அருள்பாலிக்கும் உமாமகேஸ்வரா, எனக்கு உங்களைத் தவிர வேறு கதி இல்லை. என்னைக் காத்து, பஞ்சம், பட்டினியில்லாத வாழ்க்கையை அருள்வீராக.
Tags:    

Similar News