ஆன்மிகம்

நவகிரக தோஷம் போக்கும் நவநிதி சேவை தமிழ்த் துதி

Published On 2017-04-25 13:22 IST   |   Update On 2017-04-25 13:23:00 IST
நவநிதிகளது மந்திரங்களை மனதுக்குள் தலா மூன்று முறை சொல்லிவிட்டு 9 குழந்தைகளுக்கு நவக்ரஹ துணிகளை வரிசையாக வைத்துத் தாம்பூலத்துடன் கொடுத்து வணங்க வேண்டும்.
ஓம் மகேஸ்வரன் நேசனும் நாரணன் பத்தினியும்,
மகதைச்வர்யம் தந்து நிற்க, மாதேவன்
திருவருளால் மங்களமும் வந்து. திக்க
குருவருளும் முன்நின்று குலம் வாழக் காக்க
மருவான தரித்திரங்கள் மறைந்து ஓடிட
ஒரு காலும் பிரியாத நவநிதிகள் முன் நிற்க
சங்கநிதி பதுமநிதி சாட்சி போலே நிற்க
சங்காஜ்யம், மகா பத்மம் மகராக்யம் மகிழ
சுகச்சபமும் முகுந்த குந்தனமும் சிரிக்ஜ
நீலவனும் நெருங்கி நேசமுடன் காக்க
நிதியருளால் எல்லாமும் ஏற்றமாய்ச் சேர
விதிதனை மாற்றி அருள்நிதியும் குவிய
அகிலமதில் மானுடமும் அழகுடனே வாழ்க!

நவநிதிகள் அருள் கூட்டும் முத்ரா ஜபம் குபேரனுக்கும், மகாலக்ஷ்மிக்கும், நவநிதிகளுக்கும் பிடித்தமான சங்கு முத்திரையை கையில் செய்தபடி நவநிதிகளது மந்திரங்களை மனதுக்குள் தலா மூன்று முறை சொல்லிவிட்டு ஒன்பது குழந்தைகளுக்கு நவக்ரஹ துணிகளை வரிசையாக வைத்துத் தாம்பூலத்துடன் கொடுத்து வணங்க வேண்டும்.

Similar News