ஆன்மிகம்

இன்று பங்குனி உத்திர விரதத்தை கடைபிடிப்பது எப்படி?

Published On 2019-03-21 01:36 GMT   |   Update On 2019-03-21 01:36 GMT
பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திர தினத்தில் பவுர்ணமி நிலவு ஒளிவீசும் தினத்தை ஒரு விரத நாளாகவே கருதி முருகனை வழிபட்டால் கன்னியர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும்.
பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திர தினத்தில் பவுர்ணமி நிலவு ஒளிவீசும் தினத்தை ஒரு விரத நாளாகவே கருதி முருகனை வழிபட்டால் கன்னியர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். திருமணம் ஆன பெண்களின் மாங்கல்யம் பலம் பெறும்.

பங்குனி உத்திர விரதத்தை எப்படி மேற்கொள்வது?

பங்குனி உத்திரம் தினத்தன்று அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு வீட்டில் விளக்கேற்றி முருகப்பெருமானை வணங்க வேண்டும். நாளை ஒரு வேலை மட்டுமே உணவு உண்டு விரதம் இருக்க வேண்டும்.

ஆண், பெண் என அனைவருமே இந்த விரதத்தை அனுசரிக்கலாம். அதிகாலையில் குளித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் ஒரு விளக்கு ஏற்றி வைத்து முருகன் துதிப் பாடல்களை பாடலாம். அன்று முழுவதும் எந்த உணவையும் எடுத்துக் கொள்ளாமல் விரதம் மேற்கொள்ளலாம்.

முடிந்தால் பகல் வேளையில் ஏழை- எளியவர்ளுக்கு அன்னதானம் செய்யலாம். இந்த திருநாளில் தண்ணீர் பந்தல் அமைத்து நீர், மோர் வழங்குபவர் வளம் பெறுவார்கள்.

மாலையில் அருகில் உள்ள முருகன் கோவில் அல்லது முருகன் சன்னதி உளள கோவிலுக்கு சென்று முருகனை தரிசித்து வரலாம். பிறகு இரவில் சாத்வீகமான உணவை எடுத்துக் கொண்டு விரதத்தை முடித்துக் கொள்ளலாம்.
Tags:    

Similar News