கிரிக்கெட்

அமலியா கெர்

அமலியா அபார ஆட்டம்: பெங்களூரு அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது மும்பை இந்தியன்ஸ்

Published On 2023-03-21 13:59 GMT   |   Update On 2023-03-21 13:59 GMT
  • முதலில் ஆடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 9 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்தது.
  • அமலியா கெர் போட்டியின் சிறந்த வீராங்கனையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மும்பை:

மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை டிஒய் பாட்டீல் ஸ்டேடியத்தில் நடந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. முதலில் ஆடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக எல்லிஸ் பெர்ரி, ரிச்சா கோஷ் தலா 29 ரன்கள் எடுத்தனர். மும்பை தரப்பில் அமலியா கெர் 3 விக்கெட் கைப்பற்றினார். நாட் ஷிவர் பிரண்ட், இஸ்சி வாங் தலா 2 விக்கெட் எடுத்தனர்.

இதையடுத்து 126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கியது. துவக்க வீராங்கனைகள் ஹெய்லி மேத்யூஸ் 24 ரன்களும், யஸ்திகா பாட்டியா 30 ரன்களும் சேர்த்து நம்பிக்கை அளித்தனர். அதன்பின் நாட் ஷிவர் பிரண்ட் 13 ரன், கேப்டன் கவுர் 2 ரன், பூஜா வஸ்த்ராகர் 19 ரன் என ஆட்டமிழந்தனர். மறுமுனையில் அபாரமாக ஆடிய அமலியா கெர், 21 பந்துகள் மீதமிருந்த நிலையில் அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 129 ரன்கள் எடுத்ததால், 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அமலியா கெர் ஆட்டமிழக்காமல் 31 ரன்கள் சேர்த்தார். அவர் போட்டியின் சிறந்த வீராங்கனையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்த வெற்றியின் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி புள்ளி பட்டியலில் 12 புள்ளிகளுடன் மீண்டும் முதலிடத்தை பிடித்தது. டெல்லி அணி 10 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் தோல்வி அடைந்த பெங்களூரு அணி 4 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது.

Tags:    

Similar News