கிரிக்கெட்

பெண்கள் ஐ.பி.எல். கிரிக்கெட் - வீராங்கனைகள் ஏலம் மும்பையில் வரும் 13ம் தேதி நடக்கிறது

Update: 2023-02-03 01:02 GMT
  • பெண்கள் ஐ.பி.எல். கிரிக்கெட் ஒளிபரப்பு உரிமத்தை வியாகாம் 18 நிறுவனம் பெற்றுள்ளது.
  • ஐ.பி.எல். வீராங்கனைகள் ஏலம் மும்பையில் வரும் 13-ம் தேதி நடைபெறும்.

மும்பை:

இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் ஐ.பி.எல். பாணியில் முதலாவது பெண்கள் பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி மும்பையில் மார்ச் மாதம் நடத்தப்படுகிறது. இந்தப் போட்டிக்கான 5 அணிகள் ஏற்கனவே ஏலம் விடப்பட்டு விட்டன.

இந்நிலையில், இந்தப் போட்டிக்கான வீராங்கனைகள் ஏலம் மும்பையில் வரும் 13-ம் தேதி நடைபெறும் என தகவல் வெளியாகி இருக்கிறது.

பெண்கள் ஐ.பி.எல். கிரிக்கெட்டின் ஒளிபரப்பு உரிமத்தை வியாகாம் 18 நிறுவனம் ரூ.951 கோடிக்கு வாங்கியுள்ளது.

Tags:    

Similar News