கிரிக்கெட் (Cricket)

அறிமுக போட்டியில் சாதனை படைத்த திலக் வர்மா

Published On 2023-08-04 12:28 IST   |   Update On 2023-08-04 12:28:00 IST
  • இந்த போட்டியில் திலக் வர்மா அதிகபட்சமாக 39 ரன்கள் எடுத்தார்.
  • இதில் 2 பவுண்டரி மற்றும் 3 சிக்சர்கள் அடங்கும்.

வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர் முடிவடைந்த நிலையில் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர் நேற்று தொடங்கியது. ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணியின் திலக் வர்மா மற்றும் முகேஷ் குமார் அறிமுகமாயினர்.

இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. 20 ஓவர் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 149 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்திய அணியில் அறிமுகமான திலக் வர்மா அதிகபட்சமாக 39 ரன்கள் எடுத்தார். இதில் 2 பவுண்டரி மற்றும் 3 சிக்சர்கள் அடங்கும். இதன் மூலம் அவர் அறிமுக டி20-யில் அரிதான சாதனை ஒன்றை நிகழ்த்தி உள்ளார்.

வெளிநாட்டில் அறிமுக போட்டியில் 3 சிக்சர் அடித்த வீரர்களில் ராகுல் டிராவிட் மற்றும் முரளி விஜய் ஆகியோருடன் திலக் வர்மா இணைந்துள்ளார்.

Tags:    

Similar News