கிரிக்கெட்

இந்தியா போன்ற அணிக்கு எதிராக தொடரை வெல்வது பெரிய விஷயம்- ரோவ்மேன் பவல்

Published On 2023-08-14 07:27 GMT   |   Update On 2023-08-14 07:27 GMT
  • இந்த வெற்றியை வார்த்தைகளால் கூறுவது கடினம்.
  • எங்கள் முகத்தில் சிரிப்பை வரவழைப்பதற்காக மட்டுமல்லாமல், மக்களுக்காகவும் நாங்கள் விளையாடுகிறோம்.

கடைசி டி20 போட்டியில், இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் வீழ்த்தி தொடரைக் கைப்பற்றியது.

இதன்மூலம் 17 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணியை ஒரு தொடரில் வீழ்த்தி மேற்கிந்திய தீவுகள் அணி சாதனை படைத்தது.

அதேபோல் 12 டி20 தொடர்களில் ஒன்றில் கூட தோல்வியடையாமல் இருந்து வந்த இந்திய அணிக்கு முட்டுக்கட்டை போட்டது.

இந்நிலையில் மக்களுக்காகவும் நாங்கள் விளையாடுகிறோம் என்று தொடரை வென்ற பின்னர் மேற்கிந்திய தீவுகள் கேப்டன் ரோவ்மன் பாவெல் கூறினர்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

இந்த வெற்றியை வார்த்தைகளால் கூறுவது கடினம். எங்கள் உணர்வுகளை கூற போதுமான சொற்கள் இல்லை. ஒரு நெடிய தொடரில் இந்திய அணியை தோற்கடித்துள்ளோம். நேற்று இரவு (4வது போட்டி அன்று) நாங்கள் மோசமாக தோற்கடிக்கப்பட்ட பிறகு உட்கார்ந்து பேசினோம்.

எங்கள் முகத்தில் சிரிப்பை வரவழைப்பதற்காக மட்டுமல்லாமல், மக்களுக்காகவும் நாங்கள் விளையாடுகிறோம். பயிற்சி ஊழியர், சேர்மன் ஆகியோருக்கு இந்த பெருமை போய்சேரும். இந்தியா போன்ற அணிக்கு எதிராக தொடரை வெல்வது பெரிய விஷயம்.

தனிப்பட்ட செயல்திறனில் நான் பெரியவன், தனிநபர்கள் சிறப்பாக செயல்படும் போது அது அணிக்கு உதவுகிறது. நிக்கோலஸ் பூரன் ஒரு சிறந்த வீரர். ஐந்து ஆட்டங்களிலும் ஒரு வீரர் ரன்களை குவிப்பது எளிதல்ல என்று எங்களுக்குத் தெரியும். ஆனால் குறைந்தபட்சம் மூன்று போட்டிகளில் சிறப்பான ரன்களை சேர்த்தால் வெற்றிகள் கிடைக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News