கிரிக்கெட்

சில வினாடிகள் மட்டுமே பார்த்துவிட்டு 3-ம் நடுவர் முடிவை எடுத்துவிட்டார்- நவ்ஜோத் சிங் சித்து

Published On 2024-05-08 14:56 GMT   |   Update On 2024-05-08 14:56 GMT
  • டெக்னாலஜியை பயன்படுத்தி தவறு செய்யும் போது, ஏன் டெக்னாலஜியை பயன்படுத்த வேண்டும்.
  • டெக்னாலஜியை பயன்படுத்துவதை ஸ்டாப் பண்ண வேண்டும்.

ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி அணி 221 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி 201 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் டெல்லி கேபிடல்ஸ் 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் சஞ்சு சாம்சனுக்கு நடுவர்கள் கொடுத்த தவறான முடிவால் தான் ராஜஸ்தான் அணி தோல்வி தழுவியது என ரசிகர்கள் மட்டுமின்றி முன்னாள் வீரர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சஞ்சு சாம்சனுக்கு அவுட் கிடையாது. நடுவர்கள் தவறான முடிவு எடுத்துள்ளனர் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

கேட்ச் பிடிக்கும் போது பீல்டர் பவுண்டரி லைனை 2 முறை தொட்டுவிட்டார். ரிப்ளேவில் சில வினாடிகள் மட்டுமே பார்த்துவிட்டு மூன்றாவது நடுவர் முடிவை எடுத்துவிட்டார். பல கோணங்களில் பீல்டரின் கால் பவுண்டரி ரோப்பை தொட்டதா இல்லையா என்பதை தெளிவாக பார்த்திருக்க வேண்டும்.

டெக்னாலஜியை பயன்படுத்தி தவறு செய்யும் போது, ஏன் டெக்னாலஜியை பயன்படுத்த வேண்டும். டெக்னாலஜியை பயன்படுத்துவதை ஸ்டாப் பண்ண வேண்டும். 

Tags:    

Similar News