கிரிக்கெட் (Cricket)

கேகேஆர் வீரர் விரைவில் இந்திய அணிக்காக ஆடுவார்- ஹர்பஜன் சிங் நம்பிக்கை

Published On 2023-05-11 16:18 IST   |   Update On 2023-05-11 16:18:00 IST
  • இன்று அவர் இருக்கும் இடத்தை அடைய மிகத்தீவிரமாக உழைத்திருக்கிறார்.
  • இளம் வீரர்களுக்கும் சிறுவர்களுக்கும் அவர் வாழ்க்கை மிகச்சிறந்த பாடம்.

ஐபிஎல் 16-வது சீசன் சுவாரஸ்யமான கட்டத்தில் உள்ளது. குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சிஎஸ்கே அணிகள் டாப் 2 இடங்களில் வலுவாக இருப்பதால் அவை இரண்டும் பிளே ஆஃபிற்கு முன்னேறிவிடும். எஞ்சிய 2 இடங்களுக்கு டெல்லி கேப்பிட்டள்ஸ் மற்றும் சன்ரைசர்ஸை தவிர மற்ற அனைத்து அணிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

இந்த சீசனில் சில இளம் வீரர்கள் அபாரமாக விளையாடி அசத்தியுள்ளனர். திலக் வர்மா, ரிங்கு சிங், யஷஸ்வி ஜெய்ஸ்வால், அபிஷேக் ஷர்மா ஆகிய வீரர்கள் மிகச்சிறப்பாக விளையாடிவருகின்றனர். இவர்களில் அபிஷேக்கை தவிர மற்ற மூவரும் இந்திய அணியில் ஆடுமளவிற்கு வளர்ந்துவிட்டனர். இவர்கள் மூவரும் விரைவில் இந்திய அணியில் ஆடுவார்கள் என்று முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து கூறிவருகின்றனர்.

இந்நிலையில் கேகேஆர் வீரர் ரிங்கு சிங் விரைவில் இந்திய அணிக்காக ஆடுவார் என்று ஹர்பஜன் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

 

இதுகுறித்து ஹர்பஜன் சிங் பேசியதாவது:-

ரிங்கு சிங்கிற்கு இந்திய அணியில் மிக விரைவில் வாய்ப்பு கிடைக்கும். அதற்கு இன்னும் ரொம்ப தூரம் இல்லை. இன்று அவர் இருக்கும் இடத்தை அடைய மிகத்தீவிரமாக உழைத்திருக்கிறார்.

அவர் மீது அவர் வைத்திருக்கும் நம்பிக்கைக்குத்தான் முழு கிரெடிட். இளம் வீரர்களுக்கும் சிறுவர்களுக்கும் ரிங்கு சிங்கின் வாழ்க்கை மிகச்சிறந்த பாடம்.

என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News