கிரிக்கெட்

"நைட் பார்ட்டி" இதுதான் சில அணிகள் சாம்பியன் ஆகாமல் இருப்பதற்கு காரணம் என்கிறார் ரெய்னா

Published On 2024-04-22 04:57 GMT   |   Update On 2024-04-22 04:57 GMT
  • நீங்கள் இரவு நேர பார்ட்டியில் கலந்து கொண்டால், காலையில் உங்களால் எப்படி விளையாட முடியும்?.
  • மே-ஜூன் மாதம் அடிக்கும் வெயிலில் எப்படி மதியம் போட்டியில் விளையாட முடியும்?.

ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடிய சுரேஷ் ரெய்னா பிரபலமான வீரராக திகழ்ந்தவர். ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் இவரது பெயர் இடம் பிடித்துள்ளது. சாம்பியன் பட்டம் வென்ற சிஎஸ்கே அணியில் இருந்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா, சன்ரைசர்ஸ் ஐதராபாத், குஜராத் டைட்டன்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் சாம்பியன் பட்டம் வென்றுள்ளன. ஆர்சிபி, டெல்லி, பஞ்சாப், லஎஸ்ஜி அணிகள் கோப்பையை இதுவரை வென்றதில்லை.

இந்த நிலையில் நைட் பார்ட்டியில் கலந்து கொள்ளும் அணிகள்தான் சாம்பியன் பட்டம் வெல்லவில்லை என ரெய்னா தெரிவித்துள்ளார்.

ஒரு பேட்டியின்போது அவர் கூறியதாவது:-

சென்னை ஒருபோதும் பார்ட்டியில் கலந்து கொண்டது கிடையாது. இதனால்தான் அவர்கள் மிகவும் வெற்றி பெற்ற அணியாக திகழ்கிறார்கள். 2 முதல் 3 அணிகள் பார்ட்டிகளில் கலந்து கொண்டுள்ளன. அதனால்தால் அவர்கள் இன்னும் சாம்பியன் பட்டம் வெல்லவில்லை. ஆர்சிபி-ஐ கூறுகிறீர்களா? என்ற கேட்டதற்கு, இல்லை. அங்கு சில அணிகள் கோப்பைகளை வெல்லவில்லை. அவர்கள் பார்ட்டியில் மிகப்பெரிய அளவில் கலந்து கொள்கிறார்கள்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதைச் செய்யாது. அதனால்தான் ஐந்து ஐபிஎல் சாம்பியன்ஸ், 2 சாம்பியன்ஸ் டிராபி லீக் டிராபிகள் ஆகியவற்றை வென்றுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணியும் ஐந்து கோப்பைகள் வென்றுள்ளது.

நீங்கள் இரவு நேர பார்ட்டியில் கலந்து கொண்டால், காலையில் உங்களால் எப்படி விளையாட முடியும்?. இரவு முழுவதும் பார்ட்டியில் கலந்து கொண்டால், மே-ஜூன் மாதம் அடிக்கும் வெயிலில் எப்படி மதியம் போட்டியில் விளையாட முடியும்?.

மொத்த அணியும் நள்ளிரவு பார்ட்டியில் கலந்து கொள்ளாமல் இருந்தது. நாங்கள் இந்தியாவுக்காக விளையாடியுள்ளோம். அது எங்கள் மனதில் இருக்கும்.

இவ்வாறு சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News