கிரிக்கெட் (Cricket)

பயிற்சியில் இந்திய அணி வீரர்கள்

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி

Published On 2022-06-17 11:23 IST   |   Update On 2022-06-17 11:23:00 IST
  • தொடரை சமன் செய்ய இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் ரிஷப்பண்ட் தலைமையிலான இந்திய அணிக்கு உள்ளது.
  • தென்ஆப்பிரிக்க அணியை பொறுத்தவரை வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றி விடும்.

ராஜ்கோட்:

இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் 4-வது 20 ஓவர் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று நடக்கிறது. இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிஷனில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

முதல் 2 ஆட்டத்திலும் தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்று 3-வது போட்டியில் இந்தியா வெற்றியை ருசித்தது. இதனால் 5 போட்டி கொண்ட தொடரில் தென்ஆப்பிரிக்கா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

தொடரை சமன் செய்ய இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் ரிஷப்பண்ட் தலைமையிலான இந்திய அணிக்கு உள்ளது. தோற்றால் தொடரை இழந்து விடும். இதனால் வெற்றிக்காக கடுமையாக போராடுவார்கள்.

தென்ஆப்பிரிக்க அணியை பொறுத்தவரை வெற்றி பெற்றால் தொடரை கைப்பற்றி விடும். இதனால் இந்த போட்டி பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

இந்திய அணி இதே அணியுடன் களமிறங்குமா அல்லது அணியில் ஏதும் மாற்றம் இருக்குமா? முக்கியமாக உம்ரான் மாலிக் களமிறங்குவாரா என ரசிகர்கள் எதிர்ப்பார்க்கின்றனர். 

Tags:    

Similar News