கிரிக்கெட் (Cricket)

தமிழக கிரிக்கெட் வீரர் பாபா அபராஜித் திருமணம்- நீச்சல் வீராங்கனையை மணந்தார்

Published On 2023-08-21 17:13 IST   |   Update On 2023-08-21 17:13:00 IST
  • நீச்சல் வீராங்கனையும், நடிகர் தலைவாசல் விஜய்-ராஜேஸ்வரி குமாரி தம்பதியின் மகளுமான ஜெயவீனாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.
  • பாபா அபராஜித்-ஜெயவீனா திருமணம் சென்னை திருவான்மியூரில் நடைபெற்றது.

சென்னை:

தமிழக கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவர் பாபா அபராஜித் அவர் முதல்தர போட்டியில் 90 ஆட்டங்களில் விளையாடி 11 சதம் உள்பட 4571 ரன் எடுத்து உள்ளார்.

2012-ம் ஆண்டு நடந்த ஜூனியர் உலக கோப்பை போட்டியில் துணை கேப்டனாக பணிபுரிந்து இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். இந்திய 'ஏ' அணிக்காக 100 போட்டியில் விளையாடி 3768 ரன் எடுத்துள்ளார்.

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் உதவி செயலாளர் டாக்டர் ஆர்.என்.பாபா-டாக்டர் ரேவதி தம்பதியின் மகனான 29 வயதான பாபா அபராஜித்துக்கும், நீச்சல் வீராங்கனையும், நடிகர் தலைவாசல் விஜய்-ராஜேஸ்வரி குமாரி தம்பதியின் மகளுமான ஜெயவீனாவுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.

பாபா அபராஜித்-ஜெயவீனா திருமணம் சென்னை திருவான்மியூரில் நடைபெற்றது.

முக்கிய பிரமுகர்கள், கிரிக்கெட் வீரர்கள், சினிமா பிரபலங்கள் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்கள்.

மணமக்களை நேரில் வாழ்த்தியவர்கள் விவரம்:- சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் முன்னாள் தலைவர் என்.சீனிவாசன், சித்ரா சீனிவாசன், இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவன முழுநேர இயக்குனர் ரூபா குருநாத், த.மா.கா.தலைவர் ஜி.கே.வாசன், நடிகர்கள் பிரபு, சிவக்குமார், அரவிந்த்சாமி, கார்த்தி, விஜய்சேதுபதி, பொன்வண்ணன், எஸ்.வி.சேகர், நாசர், ரமேஷ் கண்ணா, அஜய் ரத்தினம், நடிகைகள் ரேவதி, சுஹாசினி, மஞ்சு பார்கவி, சித்தாரா இயக்குனர்கள் மணிரத்தினம், சித்ரா லட்சுமணன், ராஜீவ் மேனன் மற்றும் தோட்டா தரணி.

சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் பரத் அருண், தினேஷ் கார்த்திக், ஆர்.அஸ்வின், விஜய்சங்கர், வருண் சக்கரவர்த்தி, சந்தீப் வாரியர், வீராங்கனைகள் சுதாஷா, காமினி, நிரஞ்சனா, சென்னை சூப்பர் கிங்ஸ் தலைமை செயல் அதிகாரி கே.எஸ்.விஸ்வநாதன் மற்றும் தமிழ்நாடு ரஞ்சி கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்டோர் மணமக்களை வாழ்த்தினார்கள்.

Tags:    

Similar News