கிரிக்கெட்

தொடர் தோல்வி: கிரிக்கெட் வாரியம் கலைப்பு

Published On 2023-11-06 06:38 GMT   |   Update On 2023-11-06 06:43 GMT
  • இலங்கையில் வாரியத்திற்கு எதிராக போராட்டங்கள் நடந்தன
  • 1996 உலக கோப்பையை ரணதுங்க தலைமையில் இலங்கை வென்றது

கடந்த அக்டோபர் 5 அன்று ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலக கோப்பை 2023 போட்டித்தொடர் தொடங்கியது. இத்தொடரின் போட்டிகள் அனைத்தும் இந்தியாவில் நடைபெறுகிறது. நவம்பர் 19 அன்று இத்தொடரின் இறுதி போட்டி நடைபெற உள்ளது.

இந்நிலையில், இப்போட்டியில் பங்கேற்ற இலங்கை அணி, தொடர் தோல்வியை சந்தித்தது. இந்த போட்டித்தொடரிலிருந்து வெளியேறும் நிலைக்கு இலங்கை அணி தள்ளப்பட்டு விட்டது.

குறிப்பாக இந்தியாவுடன் நடந்த போட்டியில் 55 ரன்கள் மற்றுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இப்போட்டியில் இந்தியா 302 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மோசமான ஆட்டத்தை இலங்கை அணியினர் வெளிப்படுத்தியதால், அந்நாட்டு மக்கள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து அங்கு பல விவாதங்கள் நடத்தப்பட்டன. தற்போதைய கிரிக்கெட் வாரியத்திற்கு எதிராகவும், அதன் தலைவர் சில்வாவிற்கு எதிராகவும் இலங்கையில் பல போராட்டங்கள் நடைபெற்றன.

இந்நிலையில், இலங்கை அணியின் கிரிக்கெட் வாரியம் கலைக்கப்பட்டு விட்டது. இந்த முடிவை அந்நாட்டு விளையாட்டு துறை அமைச்சர் ரோஷன் ரணசிங்க அறிவித்தார். அடுத்த கட்ட முடிவுகளை எடுக்கும் வரையில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜுன ரணதுங்க தலைமையில் தற்காலிக வாரியம் ஒன்று அமைக்கபப்ட்டுள்ளது. இந்த வாரியத்தில் ஓய்வு பெற்ற இலங்கை உச்ச நீதிமன்ற நீதிபதிகளும் இடம் பெறுகின்றனர்.

ரணதுங்க, 1996 வருடம் நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரில் இலங்கை அணியை கேப்டனாக வழிநடத்தி கோப்பையை வெல்ல காரணமாக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News