கிரிக்கெட் (Cricket)
null

இந்தியாவுக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சு தேர்வு- பிரசித் கிருஷ்ணா அறிமுகம்

Published On 2023-12-26 13:47 IST   |   Update On 2023-12-26 13:52:00 IST
  • இந்திய அணி இதுவரை டெஸ்ட் தொடரை வெல்லாத ஒரே இடம் தென்ஆப்பிரிக்க தேசம் தான்.
  • 1992-ம் ஆண்டு முதல் இதுவரை 8 முறை அங்கு டெஸ்ட் தொடரில் விளையாடியும் ஒரு தடவை கூட தொடரை கைப்பற்றவில்லை.

இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டி20, ஒருநாள் தொடர் முடிவடைந்த நிலையில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் இன்று தொடங்குகிறது.

இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. டெஸ்ட் கிரிக்கெட்டில் பிரசித் கிருஷ்ணா அறிமுகமாகி உள்ளார். இந்தியாவிற்காக டெஸ்ட்டில் அறிமுகமாகும் 309-வது வீரர் இவர் ஆவார்.

இந்திய அணி இதுவரை டெஸ்ட் தொடரை வெல்லாத ஒரே இடம் தென்ஆப்பிரிக்க தேசம் தான். 1992-ம் ஆண்டு முதல் இதுவரை 8 முறை அங்கு டெஸ்ட் தொடரில் விளையாடியும் ஒரு தடவை கூட தொடரை கைப்பற்றவில்லை. மேலும் இந்திய அணியில் அஸ்வின் இடம் பிடித்துள்ளார்.

7 முறை தொடரை பறிகொடுத்திருக்கும் இந்திய அணி 2010-11-ம் ஆண்டில் மட்டும் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்திருந்தது. அசாருதீன், சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, ராகுல் டிராவிட், டோனி, விராட் கோலி ஆகிய கேப்டன்களால் முடியாத அந்த 31 ஆண்டு கால ஏக்கத்தை ரோகித் சர்மா படை தணிக்குமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

போட்டிக்கான இரு அணிகளின் ஆடும் லெவன் வருமாறு:-

இந்தியா:

ரோகித் சர்மா (கேப்டன்), ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, லோகேஷ் ராகுல், ஸ்ரேயாஸ் அய்யர், ஷர்துல் தாக்குர், அஸ்வின், பும்ரா, பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ்.

தென்ஆப்பிரிக்கா:

டீன் எல்கர், மார்க்ரம், டோனி டி ஜோர்ஜி, பவுமா (கேப்டன்), கீகன் பீட்டர்சன், டேவிட் பெடிங்ஹாம், கைல் வெரைன், மார்கோ யான்சென், ஜெரால்டு கோட்ஜீ, ககிசோ ரபடா, லுங்கி இங்கிடி.

Tags:    

Similar News