கிரிக்கெட் (Cricket)

டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்சர்கள் - கப்தில் சாதனையை முறியடிப்பாரா ரோகித் சர்மா

Published On 2022-09-20 02:32 IST   |   Update On 2022-09-20 02:42:00 IST
  • ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற உள்ளது.
  • இந்த டி20 தொடரில் ரோகித் சர்மா புதிய சாதனை ஒன்றை படைக்கும் வாய்ப்புள்ளது.

புதுடெல்லி:

இந்திய கேப்டன் ரோகித் சர்மா 2022ம் ஆண்டில் 17 டி20 போட்டிகளில் 423 ரன்கள் அடித்துள்ளார். இதில் 21 சிக்சர்களும் அடங்கும்.

இந்நிலையில், டி20 போட்டிகளில் இன்னும் 2 சிக்சர்கள் அடித்தால் அதிக சிக்சர்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்திற்கு இந்திய கேப்டன் ரோகித் சர்மா முன்னேறுவார். தற்போது 171 சிக்சர்களுடன் ரோகித் இரண்டாம் இடத்தில் உள்ளார்.

நியூசிலாந்து அணியின் மார்ட்டின் கப்தில் 172 சிக்சர்களுடன் முதலிடத்தில் உள்ளார். அவர்களுக்கு அடுத்தபடியாக மேற்கிந்திய தீவுகள் அணியின் கிறிஸ் கெய்ல் 124 சிக்சர்களுடன் மூன்றாம் இடத்தில் உள்ளார்.

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான நடைபெறும் டி20 தொடரில் ரோகித் சர்மா அதிக சிக்சர்கள் விளாசி முதலிடத்தை பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News