கிரிக்கெட் (Cricket)

எம்எஸ் டோனி போல கீப்பிங் செய்த ரியான் பராக்- வைரலாகும் வீடியோ

Published On 2023-02-15 16:28 IST   |   Update On 2023-02-15 16:28:00 IST
  • பயிற்சியில் இருந்த மற்ற வீரர்கள் கீப்பிங் செய்யும் போது டோனியின் ஸ்டைலைப் பின்பற்றுமாறு பராக்கைக் கேட்டுக் கொண்டனர்.
  • இதனை ராஜஸ்தான் ராயல்ஸ் டுவிட்டரில் பகிர்ந்துள்ளது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் ஆல்ரவுண்டர் ரியான் பராக், முன்னாள் இந்திய கேப்டன் மகேந்திர சிங் டோனியை பயிற்சி ஆட்டத்தின்போது இமிடேட் செய்துள்ளார். அதை இந்திய கிரிக்கெட் உலகம் ரசித்துப் பாராட்டி வருகிறது. இதனை ராஜஸ்தான் ராயல்ஸ் டுவிட்டரில் பகிர்ந்துள்ள வீடியோவில், "ரியான் பராக் எம்எஸ் டோனியை நேசிக்கிறார்!" என்று தலைப்பிட்டுள்ளது.

21 வயதான பராக் கையுறைகளை அணிந்து ஸ்டம்புகளுக்குப் பின்னால் நின்று பயிற்சியாளரிடம் இருந்து குறிப்புகளை எடுத்துக்கொள்கிறார். பயிற்சியில் இருந்த மற்ற வீரர்கள் கீப்பிங் செய்யும் போது டோனியின் ஸ்டைலைப் பின்பற்றுமாறு பராக்கைக் கேட்டுக் கொண்டனர்.

இதையடுத்து டோனி செய்வது போல் பராக் தோள்களை அசைக்கிறார். இதனை அனைவரும் ரசிக்கின்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags:    

Similar News