கிரிக்கெட்

விடாமுயற்சியுடன் வெற்றிக்கு போராடியது மிகவும் மகிழ்ச்சி- டு பிளெசிஸ்

Published On 2024-04-16 06:00 GMT   |   Update On 2024-04-16 06:00 GMT
  • 280 ரன்கள் என்பது மிகப்பெரிய இலக்கு. அது எட்டுவதற்கு கடினமான ஒன்று.
  • பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்தும்போது பந்துவீச்சாளர்களின் சமநிலை தவறியது.

ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் பெங்களூரு- ஐதராபாத் அணிகள் மோதின. இதில் ஐதராபாத் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் கடைசி வரை இலக்கிற்கு நெருக்கமாக செல்வோம் என்று நினைத்தே விளையாடினோம் என ஆர்சிபி அணியின் கேப்டன் டு பிளெசிஸ் கூறினார்.

இது குறித்து அவர் கூறியதாவது:-

உண்மையிலேயே இந்த போட்டியில் எங்களது பேட்ஸ்மேன்கள் சிறப்பான ஆட்டத்தையே வெளிப்படுத்தி உள்ளனர். டி20 கிரிக்கெட் ஏற்ற மைதானமாக இந்த மைதானம் இருந்தது. கடைசி வரை இலக்கிற்கு நெருக்கமாக செல்வோம் என்று நினைத்தே விளையாடினோம்.

ஆனால் 280 ரன்கள் என்பது மிகப்பெரிய இலக்கு. அது எட்டுவதற்கு கடினமான ஒன்று. இருந்தாலும் நாங்கள் நிறைய விசயங்களை இந்த போட்டியில் முயற்சி செய்தோம். அந்த முயற்சிகள் பலன் அளிக்கவில்லை. இந்த போட்டியில் வேகப்பந்து வீச்சாளர்கள் பந்துவீசுவதில் மிக சிரமத்தை சந்தித்தனர். ஏனெனில் பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்தும்போது பந்துவீச்சாளர்களின் சமநிலை தவறியது.

எங்களது பந்துவீச்சாளர்கள் அந்த இடத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். பவர்பிளே ஓவர்களில் நாங்கள் ரன் ரேட்டினை மனதில் வைத்து தான் எந்த இடத்திலும் ரன்களை குறைய விடாமல் விளையாடினோம். ஆனால் சன்ரைசர்ஸ் அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசி எங்களை கட்டுப்படுத்தி விட்டனர். இந்த போட்டியில் 30 முதல் 40 ரன்கள் வரை நாங்கள் அதிகமாக வழங்கி விட்டோம். அதுவே தோல்விக்கு காரணமாகவும் அமைந்தது. இருந்தாலும் எங்கள் பேட்டர்கள் கடைசி வரை நின்று விடாமுயற்சியுடன் வெற்றிக்கு போராடியது மிகவும் மகிழ்ச்சி.

இவ்வாறு டு பிளெசிஸ் கூறினார்.

Tags:    

Similar News