கிரிக்கெட்

பயிற்சி ஆட்டத்தை ஒத்திவைத்த ஆர்சிபி: காரணம் தெரியுமா?

Published On 2024-05-22 09:13 GMT   |   Update On 2024-05-22 09:13 GMT
  • பயங்கரவாத சந்தேகத்தின் பேரில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • இதனால் பயிற்சி ஆட்டத்தை ஆர்சிபி ரத்து செய்தது.

அகமதாபாத்:

ஐ.பி.எல். தொடரில் எலிமினேட்டர் சுற்று இன்று அகமதாபாத்தில் நடைபெற உள்ளது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

இதற்கான பயிற்சி ஆட்டம் அகமதாபாத் குஜராத் கல்லூரி மைதானத்தில் நடைபெறுவதாக இருந்தது.

ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காக ராஜஸ்தானுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தை பெங்களூரு அணி நேற்று ரத்து செய்தது. மேலும், செய்தியாளர் சந்திப்பையும் ரத்து செய்துள்ளது.

கடந்த திங்கட்கிழமை இரவு அகமதாபாத் விமான நிலையத்தில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் 4 பேரை குஜராத் போலீசார் கைதுசெய்தனர். அவர்களது இடங்களை சோதனை செய்தபின் ஆயுதங்கள், சந்தேகத்திற்கு இடமான வீடியோக்கள், குறுஞ்செய்திகளை போலீசார் மீட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, ஆர்சிபி அணியின் பயிற்சி ஆட்டம் மற்றும் செய்தியாளர் சந்திப்பு ரத்து செய்யப்பட்டது.

விராட் கோலி அகமதாபாத்திற்கு வந்த பிறகு பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டதைப் பற்றி அறிந்தார். அவர் ஒரு தேசிய பொக்கிஷம், அவருடைய பாதுகாப்பு எங்கள் முன்னுரிமை என போலீசார் தெரிவித்தனர். அகமதாபாத்தில் உள்ள இரு அணி விடுதிகளுக்கு வெளியே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

Tags:    

Similar News