கிரிக்கெட்
null

சொந்த மாநிலத்தில் சதம் அடித்தார் ஜடேஜா

Published On 2024-02-15 11:26 GMT   |   Update On 2024-02-15 12:15 GMT
  • ரோகித் சர்மா- ஜடேஜா ஜோடி 204 ரன்கள் குவித்தது.
  • ஜடேஜா- சர்பராஸ் கான் ஜோடி 77 ரன்கள் சேர்த்தது.

இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று காலை குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது.

33 ரன்கள் எடுப்பதற்குள் இந்தியா 3 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. 4-வது விக்கெட்டுக்கு ரோகித் சர்மா உடன் ஜடேஜா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ரோகித் சர்மா சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். 157 பந்தில் சதம் அடித்த அவர் 131 ரன்னில் ஆட்டமிழந்தார். அதேவேளையில் ஜடேஜா அரைசதம் கடந்தார்.

ரோகித் சர்மா- ஜடேஜா ஜோடி 204 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக அறிமுக வீரர் சர்பராஸ் கான் களம் இறங்கினார். இவர் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த, மறுபக்கம் ஜடேஜா சதத்தை நோக்கி மெதுவாக சென்று கொண்டிருந்தார். சர்பராஸ் கான் 48 பந்தில் 7 பவுண்டரி, ஒரு சிக்சருடன் அரைசதம் அடித்தார்.

முறுமுனையில் சதம் அடித்த ஜடேஜா அதிக நேரம் எடுத்துக் கொண்டார். இறுதியாக 198 பந்தில் சதம் அடித்தார் ஜடேஜா. ஆனால் சதம் அடிப்பதற்கு முன்னதாக சர்பராஸ் கான் துரதிருஷ்டவசமாக ரன்அவுட் ஆனார்.

ஜடேஜாவின் சொந்த மாநிலம் குஜராத். தனது சொந்த மாநிலத்தில் சதம் அடித்த அவர் தனது ஸ்டைலான வாள்வீச்சு முறையில் சந்தோசத்தை வெளிப்படுத்தினார். டெஸ்ட் போட்டியில் ஜடேஜாவின் 4-வது சதம் இதுவாகும். கடைசி 10 ரன்களை எடுக்க 26 பந்துகள் எடுத்துக் கொண்டார்.

குஜராத் மாநிலம் என்றாலும் அம்மாநிலத்தின் சவுராஷ்டிரா அணிக்காக ஜடேஜா விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News