கிரிக்கெட் (Cricket)
null

உலகக் கோப்பை 2023: இங்கிலாந்தை பழி தீர்த்தது நியூசிலாந்து- 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

Published On 2023-10-05 20:42 IST   |   Update On 2023-10-05 20:50:00 IST
  • நியூசிலாந்து தரப்பில் கான்வே- ரவீந்தரா ஆகியோர் சதம் அடித்தனர்.
  • நியூசிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்தும், நியூசிலாந்தும் இன்று பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 282 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஜோரூட் 77 ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து தரப்பில் ஹென்றி, பிலிப்ஸ் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனையடுத்து 283 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. 2-வது ஓவரின் முதல் பந்தில் வில் யங் டக் ஆகி வெளியேறி நியூசிலாந்துக்கு அதிர்ச்சி அளித்தார். இதனையடுத்து கான்வே உடன் 23 வயது இளம் வாலிபர் ரவீந்தரா இங்கிலாந்து அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் விளாசினார்.

இருவரும் அதிரடியாக விளையாடி சதம் அடித்தனர். இறுதியில் நியூசிலாந்து அணி 36.2 ஓவரில் 9 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி 2019 உலகக் கோப்பைக்கு பழி தீர்த்தது.

Tags:    

Similar News