கிரிக்கெட் (Cricket)

கபில் தேவின் 36 ஆண்டுகால சாதனையை முறியடித்த நெதர்லாந்து கேப்டன்

Published On 2023-10-18 14:20 IST   |   Update On 2023-10-18 14:20:00 IST
  • தென்னாப்பிரிக்கா அணி 42.5 ஓவரிலேயே 207 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
  • 16 வருடங்கள் கழித்து முதல் முறையாக உலகக் கோப்பையில் நெதர்லாந்து வெற்றியை பதிவு செய்துள்ளது.

உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் நேற்றைய 15-வது லீக் போட்டியில் தென்னாப்பிரிக்கா- நெதர்லாந்து அணிகள் மோதின. இந்த போட்டி மழையால் 43 ஓவர்களாக குறைக்கப்பட்டது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து 245 ரன்கள் சேர்த்தது. தென்னாப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக ரபாடா, லுங்கி நெகிடி, மார்கோ யான்சென் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

அதை தொடர்ந்து 246 ரன்களை துரத்திய தென்னாப்பிரிக்கா அணி 42.5 ஓவரிலேயே 207 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் நெதர்லாந்து அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தென் ஆப்பிரிக்கா சார்பில் அதிகபட்சமாக வேன் பீக் 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.

இந்த வெற்றியின் மூலம் உலகக் கோப்பை வரலாற்றில் முதல்முறையாக ஒரு டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அணிக்கு எதிராக வெற்றியை பதிவு செய்து நெதர்லாந்து சாதனை படைத்தது. அத்துடன் 2007-க்குப்பின் 16 வருடங்கள் கழித்து முதல் முறையாக உலக கோப்பையில் வெற்றியை பதிவு செய்து நெதர்லாந்து அசத்தியது.

இந்த சரித்திர வெற்றிக்கு 78* ரன்கள் எடுத்து முக்கிய பங்காற்றிய கேப்டன் ஸ்காட் எட்வர்ட்ஸ் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

7வது இடத்தில் களமிறங்கிய அவர் 10 பவுண்டரி 1 சிக்சருடன் 78* (69) ரன்கள் குவித்து வெற்றி பெற உதவினார். இதன் வாயிலாக உலகக்கோப்பை வரலாற்றில் 7-வது இடத்தில் களமிறங்கிய அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த கேப்டன் என்ற இந்திய ஜாம்பவான் கபில் தேவ் சாதனையை அவர் முறியடித்துள்ளார்.

இதற்கு முன் 36 வருடங்களுக்கு முன் நடைபெற்ற 1987 உலகக்கோப்பையில் பெங்களூருவில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் கபில் தேவ் 7-வது இடத்தில் களமிறங்கி 72* (58) ரன்கள் அடித்து அந்த சாதனையைப் படைத்து இந்தியா 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற உதவினார்.

அந்தப் பட்டியல்:

1. ஸ்காட் எட்வார்டஸ் : 78*, தென்னாபிரிக்காவுக்கு எதிராக, 2023*

2. கபில் தேவ் : 72*, நியூசிலாந்துக்கு எதிராக, 1987

3. ஹெத் ஸ்ட்ரீக் : 72*, நியூசிலாந்துக்கு எதிராக, 2003

4. தசுன் சனாக்கா : 68, தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக , 2023

Tags:    

Similar News