கிரிக்கெட் (Cricket)

ரோகித் சர்மா

டி20 கிரிக்கெட்டில் 300 பவுண்டரிகள் - ரோகித் சர்மா சாதனை

Published On 2022-07-10 16:11 IST   |   Update On 2022-07-10 16:11:00 IST
  • டி20 கிரிக்கெட்டில் 300 பவுண்டரிகளை விளாசிய முதல் இந்திய பேட்ஸ்மேன் ரோகித் சர்மா ஆவார்.
  • 298 பவுண்டரிகளுடன் விராட் கோலி இரண்டாவது இடத்தில் உள்ளார்.

பர்மிங்காம்:

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி பர்மிங்காமில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி முதலில் ஆடிய இந்தியா 20 ஓவரில் 170 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய இங்கிலாந்து 121 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இதன்மூலம் இங்கிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்தியா 49 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான ரோகித் சர்மா 2 சிக்சர், 3 பவுண்டரிகளை விளாசினார். அவர் 20 பந்தில் 31 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

இந்நிலையில், இந்தப் போட்டியில் அவர் அடித்த பவுண்டரிகளால் புதிய சாதனை படைத்துள்ளார். மொத்தம் 301 பவுண்டரிகளை அவர் அடித்துள்ளார். இதனால் டி20 கிரிக்கெட்டில் 300 பவுண்டரிகளை விளாசிய முதல் இந்திய பேட்ஸ்மேன் என்ற பெருமையை ரோகித் சர்மா பெற்றார். அவர் விராட் கோலியை பின்னுக்கு தள்ளி விட்டு (298 பவுண்டரிகள்) இந்த இடத்திற்கு வந்துள்ளார்.

இந்தப் பட்டியலில் அயர்லாந்து கிரிக்கெட் வீரர் பால் ஸ்டெர்லிங் மொத்தம் 325 பவுண்டரிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்து 2வது இடத்தில் ரோகித் உள்ளார். விராட் கோலி 3வது இடத்தில் உள்ளார்.

Tags:    

Similar News