கிரிக்கெட் (Cricket)

நவம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் விருது: பரிந்துரை பட்டியலில் முகமது சமி

Published On 2023-12-07 17:40 IST   |   Update On 2023-12-07 17:40:00 IST
  • நவம்பர் மாதத்தின் சிறந்த வீரருக்கான பரிந்துரை பெயர் பட்டியலை ஐசிசி வெளியிடப்பட்டது.
  • இதில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி பெயர் இடம் பெற்றுள்ளது.

ஒவ்வொரு மாதம் சிறந்த வீரருக்கான விருதை ஐசிசி வழங்கி வருகிறது. இந்நிலையில் நவம்பர் மாதத்தின் சிறந்த வீரருக்கான பரிந்துரை பெயர் பட்டியல் வெளியிடப்பட்டது.

இதில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி பெயர் இடம் பெற்றுள்ளது. மேலும் ஆஸ்திரேலிய வீரர்கள் 2 பேர் பெயர் இதில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அவர்கள் திராவிஸ் ஹெட் மற்றும் மேக்ஸ்வெல் ஆவர்.

நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரில் இவர்கள் மூவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தனர். உலகக் கோப்பை தொடரில் முகமது சமி அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி வீரர் என்ற விருதை தட்டிச் சென்றார். கடைசி போட்டியில் திராவிஸ் ஹெட் சதம் அடித்து அந்த போட்டியின் ஆட்ட நாயகன் விருதை பெற்றார். மற்றொரு ஆஸ்திரேலிய வீரரான மேக்ஸ்வெல் இந்த தொடரில் இரட்டை சதம் விளாசிய ஒரே வீரர் என்ற சிறப்பை பெற்றிருந்தார்.

உலகக் கோப்பை தொடரில் முதல் முறையாக இரட்டை சதம் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை மேக்ஸ்வெல் படைத்தார்.

Tags:    

Similar News