கிரிக்கெட் (Cricket)
மழையின் விளையாட்டால் கைவிடப்பட்ட போட்டி.. பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை இழந்தது குஜராத்
- தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
- பிளே ஆஃப் சுற்றில் இருந்து வெளியேறியது குஜராத் அணி.
அகமதாபாத்:
நடப்பு ஐ.பி.எல். தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில் அமகதாபாத்தில் இன்று நடைபெற உள்ள 63வது லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மோத இருந்தது.
ஆட்டம் இரவு 7.30 மணியளவில் தொடங்குவதாக இருந்தது. ஆனால், மாலை முதல் அகமதாபாத்தில் கனமழை பெய்தது. இதன் காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. மழை தொடர்ந்து பெய்து வந்ததால் இன்றைய ஆட்டம் ரத்து செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதேவேளை இரவு 11 மணிக்குள் மழை நின்றால் குறைந்தது 5 ஓவர்கள் ஆட்டமாக நடைபெற வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தொடர்ந்து மழை பெய்ததால் ஆட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால் பிளே ஆப் சுற்று வாய்ப்பில் இருந்து குஜராத் டைட்டன்ஸ் அணி வெளியேறியது.