கிரிக்கெட்

ஐ.பி.எல். தொடரில் 8 ஆயிரம் ரன்கள்: விராட் கோலி புதிய சாதனை

Published On 2024-05-22 14:42 GMT   |   Update On 2024-05-22 14:42 GMT
  • எலிமினேட்டர் சுற்றில் ராஜஸ்தான், பெங்களூரு அணிகள் மோதுகின்றன.
  • டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பவுலிங் தேர்வு செய்தது.

அகமதாபாத்:

ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. நடப்பு ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி முன்னேறியது.

இந்நிலையில், இன்று நடைபெறும் எலிமினேட்டர் சுற்றில் ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பவுலிங் தேர்வு செய்தது.

அதன்படி, பெங்களூரு அணி முதலில் களமிறங்கியது. விராட் கோலி, டூ பிளசிஸ் இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர்.

டூ பிளசிஸ் 17 ரன்னில் அவுட்டானார். விராட் கோலி ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடினார்.

ஐ.பி.எல். தொடரில் 8 ஆயிரம் ரன்கள் எடுத்த முதல் வீரர் விராட் கோலி என்ற சாதனை படைத்தார். இவருக்கு அடுத்த இடத்தில் ஷிகர் தவான் 6,769 ரன்கள் எடுத்துள்ளார்.

இதற்கிடையே, விராட் கோலி 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

Tags:    

Similar News