கிரிக்கெட்

6 விக்கெட் வீழ்த்திய ஜோப்ரா ஆர்ச்சர்- தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இங்கிலாந்து ஆறுதல் வெற்றி

Published On 2023-02-02 05:49 GMT   |   Update On 2023-02-02 05:49 GMT
  • ஜோப்ரா ஆர்ச்சர் அபாரமாக பந்து வீசி 68 ரன் கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தினார்.
  • 3 போட்டிக் கொண்ட ஒருநாள் தொடரை தென் ஆப்பிரிக்கா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

கிம்பர்லி:

தென் ஆப்பிரிக்கா-இங்கிலாந்து அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கிம்பர்லியில் நேற்று பகல்-இரவாக நடந்தது.

முதலில் ஆடிய இங்கிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 346 ரன் குவித்தது. தொடக்க வீரர் டேவிட் மலான், கேப்டன் ஜோஸ் பட்லர் சதம் அடித்தனர்.

மலான் 114 பந்தில் 118 ரன்னும் (7 பவுண்டரி, 6 சிக்சர்), பட்லர் 127 பந்தில் 131 ரன்னும் 16 பவுண்டரி, 7 சிக்சர், மொய்ன் அலி 23 பந்தில் 41 ரன்னும் (2 பவுண்டரி, 4 சிக்சர்) எடுத்தனர். நிகிடி 4 விக்கெட்டும், மார்கோ ஜான்சன் 2 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

பின்னர் விளையாடிய தென் ஆப்பிரிக்கா 43-ஓவர்களில் 287 ரன்னில் 'ஆல் அவுட்' ஆனது. இதனால் 59 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. முதல் 2 போட்டியிலும் தோற்ற இங்கிலாந்து ஏற்கனவே தொடரை இழந்து இருந்தது.

இதனால் அந்த அணிக்கு இந்த வெற்றி ஆறுதல் அளிப்பதாக இருந்தது.

ஹென்ரிச் கிளாசன் 62 பந்தில் 80 ரன்னும் (7 பவுண்டரி, 2 சிக்சர்) ஹென்ட்ரிக்ஸ் 52 ரன்னும் 6 பவுண்டரி) எடுத்தனர்.

ஜோப்ரா ஆர்ச்சர் அபாரமாக பந்து வீசி 68 ரன் கொடுத்து 6 விக்கெட் வீழ்த்தினார். ஆதில் ரஷூதுக்கு 3 விக்கெட் கிடைத்தது.

3 போட்டிக் கொண்ட ஒருநாள் தொடரை தென் ஆப்பிரிக்கா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

Tags:    

Similar News