கிரிக்கெட் (Cricket)

67 பந்தில் 100: "selfish" ஹேஷ்டேக் மூலம் விராட் கோலிக்கு எதிராக விமர்சனம்

Published On 2024-04-06 22:43 IST   |   Update On 2024-04-06 22:43:00 IST
  • விராட் கோலி ஆட்டமிழக்காமல் 72 பந்தில் 113 ரன்கள் விளாசினார்.
  • ஐபிஎல் கிரிக்கெட்டில் மிகவும் மந்தமான சதத்தை பதிவு செய்தார்.

ஆர்சிபி- ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ஜெய்ப்பூரில் நடைபெற்றது. இந்த போட்டியில் விராட் கோலி சிறப்பாக விளையாடி சதம் அடித்தார். அந்த அணியின் மற்ற வீரர்கள் சிறப்பாக விளையாடாத நிலையில் ஆட்டமிழக்காமல் 72 பந்தில் 113 ரன்கள் விளாசினார்.

ஐபிஎல் கிரிக்கெட்டில் விராட் கோலியின் மந்தமான சதம் இதுவாகும். இதனால் எக்ஸ் வலைத்தளத்தில் "selfish" ஹேஷ்டேக் உருவாக்கி விராட் கோலியை ரசிகர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.

இந்த போட்டியில் சதம் அடித்ததன் மூலம் 3-வது முறையாக 50 ரன்களை தாண்டி எடுத்துள்ளார். ஜெய்ப்பூர் மைதானத்தில் 9 முறை விளையாடி முதன்முறையாக 50 ரன்னைக் கடந்து அதை சதமாக மாற்றியுள்ளார்.

34 ரன் அடித்தபோது ஐபிஎல் கிரிக்கெட்டில் 7500 ரன்கள் அடித்து சாதனைப் படைத்தார்.

Tags:    

Similar News