கிரிக்கெட்

டோனியின் சாதனையை சமன் செய்வாரா கம்மின்ஸ்?

Published On 2024-05-26 14:03 GMT   |   Update On 2024-05-26 14:03 GMT
  • ஐதராபாத் இந்த முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.
  • சாதனையை சமன் செய்யும் வாய்ப்பு உருவாகி இருக்கிறது.

17 வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22 ஆம் தேதி துவங்கியது. இன்றுடன் நிறைவுபெறும் இந்த தொடரின் இறுதிப்போட்டி சென்னையில் நடைபெறுகிறது. 2024 ஐ.பி.எல். தொடரின் இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.

நடப்பு ஐ.பி.எல். தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு பேட் கம்மின்ஸ் கேப்டனாக செயல்படுகிறார். கடந்த ஆண்டு ஐ.பி.எல். புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தை பிடித்த ஐதராபாத் இந்த முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளது.

இந்த நிலையில், 2024 ஐ.பி.எல். தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கோப்பையை வெல்லும் பட்சத்தில், அந்த அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் எஸ்.எம். டோனியின் சாதனையை சமன் செய்யும் வாய்ப்பு உருவாகி இருக்கிறது.

50 ஓவர் உலகக் கோப்பை மற்றும் ஐ.பி.எல். கோப்பை வென்ற ஒரே கேப்டன் என்ற பெருமையை எம்.எஸ். டோனி பெற்றுள்ளார். கடந்த ஆண்டு நடைபெற்ற 50 ஓவர் உலகக் கோப்பையை ஆஸ்திரேலியா அணிக்காக பேட் கம்மின்ஸ் வென்றார். அந்த வகையில், இன்றைய இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் பட்சத்தில் எம்.எஸ். டோனியின் சாதனையை பேட் கம்மின்ஸ் சமன் செய்வார். 

Tags:    

Similar News